என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
- இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகரில் நடைபெற்ற இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம். எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க.தலைவர் ஏற்கனவே புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் அணியினர் சேர்க்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 25 லட்ச உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2-ம் கட்டமாக இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டி ருக்கிறது. ஏற்கனவே செய்த பணிகள் தான் வீடு தோறும் கொண்டு சேர்க்கிறோம் என வருடம் முழுவதும் இந்த பணியை செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். முழுமையாக நிறைவேற்றுவோம்.
கடந்த 2019, 21-ம் ஆண்டு தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை விட 2024-ல் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும். அதற்கு இளைஞர் அணி முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். கடந்த காலத்தில் இளைஞர் அணி செயலாளராக இருந்த தலைவர் தான் தற்போது முதல்-அமைச்சராக உள்ளார். பணியை முழுமையாக செய்து மாவட்ட கழகத்திற்கு முழு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
பின்னர் உறுப்பினராக சேர்த்த படிவத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் நேரில் வழங்கினர். தொடர்ந்து அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் நினைவு பரிசு ஆகியவற்றை வழங்கினார்கள்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மாநகர மகளிர் அணி செயலாளர் ஜெயக்குனி விஜயகுமார், இளைஞர் அணி முத்துராமன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர்,தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர், துணை சேர்மன், ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஆஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சர வணகுமார், கூட்டுடன்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாங்கனி ஹரி பாலகிருஷ்ணன்,ஒன்றிய துணை செயலாளர் அந்தோணி தனுஷ் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்