search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே மாயமான திருநம்பி கதி என்ன?
    X

    சூலூர் அருகே மாயமான திருநம்பி கதி என்ன?

    • விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் நண்பர்கள் ஓட்டம் பிடித்தனர்.
    • திருநம்பி என்ன ஆனார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    கோவை,

    தேனியை சேர்ந்தவர் கவி (வயது 20). பெண்ணாக பிறந்த இவர் நாளடைவில் திருநம்பியாக மாறினார். இவருக்கு பெற்றோர் இல்லை. எனவே கவி கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள பச்சாகவுண்டன் பாளையத்தில் திருநம்பியான ஜீவா என்பவருடன் வசித்து வந்தார்.

    இவர் மூங்கில் தொழுவை சேர்ந்த அண்ணன், தம்பிகளான சந்திரசேகர், ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.

    கடந்த 2-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற கவி திரும்பி வீட்டிற்கு வரவில்லை. அவருடன் தங்கி இருந்த திரு நம்பி ஜீவா அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த ஜீவா இது குறித்து சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுல்தான் பேட்டை போலீசார் கவியுடன் வேலைக்கு செல்லும் அண் ணன் தம்பி களான சந்தி ரசேகர், ராதா கிருஷ் ணன் ஆகிய ோரை போலீஸ் நிலையத் துக்கு அழைத்து விசார ணை நடத்தி னர். பின்னர் போலீசார் அடுத்த நாள் 2 பேரும் விசாரணைக்கு வரவேண்டும் என கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை. 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

    திருநம்பி கவி மாயமாகி 25 நாட்கள் ஆகியும் அவர் என்ன ஆனார். எங்கு உள்ளார் என கண்டு பிடிக்க முடியவில்லை.எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அண்ணன், தம்பிகளான சந்திரசேகர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக உள்ளதால் போலீசாருக்கு சந்கேம் ஏற்பட்டுள்ளது. திருநம்பி என்ன ஆனார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×