search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் சீல் வைத்த கட்டிடங்களை திறக்க அனுமதி கொடுத்தது யார்? - நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
    X

    குன்னூரில் சீல் வைத்த கட்டிடங்களை திறக்க அனுமதி கொடுத்தது யார்? - நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

    • மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
    • வேளாங்கண்ணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்து முட்புதர்களை அகற்ற வேண்டும்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.

    நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகராஜ், துணைத்தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 30 வார்டுகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் பேசியதாவது:-

    ஜாகீர்(திமுக): மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி வளர்ச்சி பணிக்காக ஒதுக்கிய நிதி எதுவும் முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    ராபர்ட் (திமுக): தற்போது விழாகாலம் துவங்கியுள்ளதால் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட இயலவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.

    ராமசாமி(திமுக): மவுண்ட் பிளசன்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

    தற்போது இந்த கட்டிங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை திறக்க அனுமதி கொடுத்தது யார்? இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கூட எவ்வித பலனும் இல்லை.

    மேலும் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் தனியார் கேபிள் நிறுவன ங்கள் சாலையில் கேபிள் பதித்தும் கம்பங்கள் நட்டும் வருகின்றன. இவர்கள் முறையாக நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி உள்ளார்களா? என்பதும் தெரியவில்லை.

    சரவணகுமார்(அதிமுக): சுகாதார பிரிவில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ப்படுவது குறித்து தெரிவிக்க வேண்டும். கவுடர் டாக்கீஸ் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். வேளாங்கண்ணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்து முட்புதர்களை அகற்ற வேண்டும்.

    மன்சூர்(திமுக):குன்னூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாய் மாக்ஸ் விளக்கு எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதியடைந்து வருகிறார்கள்.

    இது மட்டுமல்லாமல் நகர பகுதியில் பல இடங்களில் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை.

    இதனை ஆய்வு செய்து அதிக வாட்ஸ் உள்ள எல்.இ.டி பல்புகளை பொருத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் அதிக வாட்ஸ் கொண்ட எல்இடி விளக்குகள் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதித்தனர்.

    Next Story
    ×