என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொழுந்தனாரை தாக்கிய பெண் சேலம் ஜெயிலில் அடைப்பு
- கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது.
- மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம்.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 4- வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி.
இவரது2-வது மனைவி அலமேலு ( வயது 46). இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று கண்ணன் - அலமேலு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, ஒருவரை–யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. அந்த சமயம் கண்ணனுக்கு ஆதரவாக அவரது தம்பி குமார் மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து பெற்று வருகிறார்.
இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்ன–தானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் அலமேலுவை கைது செய்து சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைந்தனர்.