என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
- சேலத்தை அடுத்த சேலதத்தாம்பட்டியை சேர்ந்தவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
- எனக்கு சொந்தமான சொத்தின் ஒரு பகுதியை விற்று ரூ. 7 லட்சத்தை எனது சொந்த ஊர் பகுதியை சேர்ந்த சித்தேஷ் என்பவரிடம் கொடுத்தேன்.
சேலம்:
சேலத்தை அடுத்த சேலதத்தாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 34), தொழிலாளியான இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார் . பின்னர் தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது-
எனக்கு சொந்தமான சொத்தின் ஒரு பகுதியை விற்று ரூ. 7 லட்சத்தை எனது சொந்த ஊர் பகுதியை சேர்ந்த சித்தேஷ் என்பவரிடம் கொடுத்தேன், மேலும் நம்பிக்கையின் பேரில் சொத்தின் பத்திரத்தையும் அவரிடம் கொடுத்து வைத்தேன். இந்த நிலையில் எனது பணத்தையும், பத்திரத்தையும் தராமல் என்னிடம் இருந்து பிரிந்து சென்ற எனது மனைவியிடம் கொடுத்து விட்டதாக கூறுகிறார்.
இது குறித்து சித்தேஷ், எனது மனைவி செல்வி, மாமனார் மாரியப்பன் மீது கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனம் வேதனை அடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்ய இங்கு வந்தேன். கூறினார். இவரது அவர் டவுன் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.