search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்
    X

    50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்

    • நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
    • 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-

    நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    நடப்பாண்டில் மானிய கோரிக்–கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடையும் விதமாக சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு 200 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த விவசாயத்தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    முத்திரை தாள் கட்டணத்தில் விலக்கு இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிலம் வாங்க உத்தேசியுள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

    வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×