என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் குரூப்-2 தேர்வு எழுத வந்த இளம்பெண் மாயம்
- பலவேசமாரி அரசு வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.
- தேர்வு எழுதுவதற்காக பலவேசமாரியை அவரது தந்தை அழைத்து வந்துள்ளார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் பலவேசமாரி(வயது 25) பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு அரசு வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.
நேற்று குரூப்-2 முதன்மை தேர்வு நடைபெற்றதால் அதனை எழுதுவதற்காக பாளையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக பலவேசமாரியை அவரது தந்தை சண்முகசுந்தரம் அழைத்து வந்துள்ளார்.
தேர்வு மையத்திற்கு அவரை அனுப்பிவிட்டு பெருமாள்புரம் என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள தனது மற்றொரு மகளை பார்ப்பதற்காக சென்ற சண்முகசுந்தரம் மீண்டும் மாலையில் திரும்பி வந்துள்ளார். அப்போது பலவேசமாரியை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பலவேசமாரியை தேடி வருகின்றனர்.