என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
குமாரபாளையத்தில் இளம்பெண் திடீர் மாயம்
By
மாலை மலர்18 March 2023 3:18 PM IST

- 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.
- நேற்று முன்தினம் மொபட்டில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.
குமாரபாளையம்:
குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 47). விசைத்தறி தொழிலாளி. இவரது 16 வயது மகள் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் மொபட்டில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் இதுகுறித்து கதிர்வேல், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
X