என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரை ஆத்தூர் அணைப்பகுதியில் தேடும் பணி தீவிரம்
- புல்லாவெளி பகுதியில் பெய்யும் மழைத் தண்ணீர், ஆத்தூர் காமராஜர் அணைக்கு வருவதால் வாலிபர் உடல் ஆத்தூர் காமராஜர் அணைக்கு வரக்கூடும் என்ற கோணத்தில் 4 வது நாளாக தேடி வருகின்றனர்.
- எங்கள் மகன் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு என கண்ணீருடன் என வாலிபரின் தந்தை கூறினார்.
செம்பட்டி:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. இவரது மகன் அஜய்பாண்டியன் (28) இவர், திண்டுக்கல் மாவட்டம், மங்களம்கொம்பு பகுதியில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார்.
ராமநாதபுரம், சத்திரத்தை சேர்ந்த பாண்டி மகன் கல்யாணசுந்தரம் (25) நண்பன் அஜய்பாண்டியனை பார்க்க கடந்த 31-ம் தேதி மங்களம்கொம்புக்கு வந்துள்ளார். ஆடி 18-டை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை 2 பேரும் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு அஜய்பாண்டியன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கினார்.
அதனை கல்யாணசுந்தரம் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பாறையில் கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கினார். திடீரென, பாறையில் வலுக்கி விழுந்து தண்ணீர் இழுத்து சென்றது. உடனடியாக தாண்டிக்குடி போலீசாருக்கும், ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. ஆத்தூர் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் வாலிபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல், ஆத்தூர், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் ஆகிய 4 தீயணைப்பு படை வீரர்களின் குழுக்கள், புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் இருந்து ஆத்தூர் காமராஜர் அணை அருகே கன்னிமார் கோவில் வரை தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான தாண்டிக்குடி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதியில் பெய்யும் மழைத் தண்ணீர், ஆத்தூர் காமராஜர் அணைக்கு வருவதால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு வரக்கூடும் என்ற கோணத்தில் அணை தண்ணீர் வரும் கன்னிமார் கோவில் பகுதியில் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் கொட்டும் மழையில் தேடி வருகின்றனர்.
ஆனால் நேற்று வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாலிபரின் பெற்றோர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
அருவியில் தவறி விழுந்த வாலிபரின் தந்தையான நாகநாதசேதுபதி கூறுகையில், எங்களுக்கு அஜய்பாண்டியன், அருள்பாண்டியன் என 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இதில் அஜய்பாண்டியன் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு திரும்பினார். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் மங்களம்கொம்பு பகுதியில் 3 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்தார்.
இன்று 4-வது நாளாக தீயணைப்புத்துறையினர் அஜய்பாண்டியனை தேடி வருகின்றனர். எங்கள் மகன் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் புல்லாவெளி பகுதியில் தங்கியுள்ளோம். மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வக்குமார் மற்றும் பொதுமக்கள் எங்களுக்கு உதவி செய்து ஆறுதல் கூறினர். இடைவிடாமல் பெய்யும் மழையை பொருட்படுத்தாமல் தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
எங்கள் மகன் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு என கண்ணீருடன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்