என் மலர்
உள்ளூர் செய்திகள்

சரவணபாண்டி.
அய்யலூர் அருகே புறா பிடிக்க சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்து சாவு
- புறா பிடிக்க சென்றபோது எதிர்பா ராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.
- கிணற்றில் விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
வடமதுரை:
அய்யலூர் அருகே பெரு மாள் கோவில்பட்டி யைச் சேர்ந்தவர் சரவண பாண்டி (வயது 25). இவருக்கு சத்யா என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. சரவண பாண்டி அப்பகுதி யில் புறா பிடிக்கச் சென்றார்.
அப்போது எதிர்பா ராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேட சந்தூர் தீயணைப்புத்துறை யினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும் போராடி சரவண பாண்டியை மீட்டனர்.
ஆனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சரவண பாண்டியன் உடல் பிரேத பரிசோத னைக்காக திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story






