என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது
    X

    பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது

    • பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
    • போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் நகையை மீட்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அருகே உள்ள அண்ணாநகரில் கடந்த மாதம் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்கநகை, ரூ.70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    வீட்டிற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடியபோது இதில் தொடர்புடையவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள தளவாய்புரம் வன்னியன்காடு பகுதியை சேர்ந்த முத்து மகன் பிரபாகரன் (வயது 42) என தெரியவந்தது. இவர் மீது சென்னை, திருச்சி. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து திருச்செந்தூர் சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் நகையை மீட்டனர். பின்னர் அவரை ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர் பல வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×