என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட வாலிபர் கைது மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட வாலிபர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9264944-bikearrest.webp)
மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட வாலிபர் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- போலீசார் வருவதற்குள் ரேசில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஆவடியில் இருந்து திருநின்றவூர் நோக்கி சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சீறிப்பாய்ந்தனர். அவர்கள் ரேசில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் முந்தி சென்றனர். இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்குள் ரேசில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் திருநின்றவூர் முருகன் கோவில்தெருவை சேர்ந்த கதிரேசன் (24) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டது தெரிந்தது.
கதிரேசனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.