என் மலர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்
- அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் கீதா (வயது 22). இவர் வேலைக்கு செல்வதற்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த கீதா, திருடன் திருடன் என கத்தியதால் அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், சீர்காழி தாண்ராசன்குப்பம் சேர்ந்தராம்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1/2 பவுன் தங்கச்செயினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.