என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
முன்னாள் வீரர்களுக்காக லெஜண்ட்ஸ் லீக் தொடரை கொண்டுவர பி.சி.சி.ஐ. திட்டம்
- இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் நடந்தது.
- இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
மும்பை:
இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய ஐ.பி.எல். போன்ற தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதிலாக இந்தியாவிலேயே விளையாட விரும்புகின்றனர். அதை பி.சி.சி.ஐ.யிடம் முன்னாள் வீரர்கள் சேர்ந்து கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பி.சி.சி.ஐ. வருங்காலத்தில் முன்னாள் வீரர்களுக்கென ஐ.பி.எல். தொடரை நடத்த பரிசீலிக்க உள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், முன்னாள் வீரர்கள் வைத்துள்ள கோரிக்கை தற்போது முன்மொழிவு கட்டத்தில் உள்ளது. இந்த வருடம் அதை நடத்த வாய்ப்பில்லை. அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற மற்றும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காத வீரர்கள் அந்த லீக்கில் இடம்பெறுவார்கள் என தெரிவித்தார்.