search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சர்ச்சைக்கு உள்ளான கரன் ஜோகர் பேட்டி: மனம் திறந்த கே.எல்.ராகுல்
    X

    சர்ச்சைக்கு உள்ளான கரன் ஜோகர் பேட்டி: மனம் திறந்த கே.எல்.ராகுல்

    • கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.
    • உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை என்றார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல். இவரும், ஹர்திக் பாண்ட்யாவும் கடந்த 2019-ம் ஆண்டு பெரிய சர்ச்சையில் சிக்கினர்.

    காபி வித் கரன் ஜோகர் எனும் டி.வி. நிகழ்ச்சியில் பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். அங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர். அதனால் ரசிகர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர். மேலும், ஹர்பஜன், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் கடுமையாக சாடினர்.

    பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு பி.சி.சி.ஐ. அதிரடி தடை விதித்தது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து கே.எல்.ராகுல் சமீபத்தில் மனம் திறந்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது:

    நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதில் சிறந்தவனாக இருந்தேன்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.

    அந்தப் பேட்டி முற்றிலும் வித்தியாசமான உலகமாக இருந்தது. அது என்னை மாற்றியது.

    அந்தப் பேட்டி என்னிடம் பெரிய வடுவை ஏற்படுத்தியது. அதனால் நான் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

    உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. தண்டனை பெற்றதில்லை.

    அந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதுகூட எனக்கு தெரியவில்லை. பள்ளியிலும் எனது பெற்றோர் வந்து பதில் சொல்லும் அளவுக்கு நான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதில்லை என தெரிவித்தார்.

    Next Story
    ×