என் மலர்
தமிழ்நாடு

திண்டிவனம் அருகே அம்மா உணவக சாப்பாடு தட்டில் பல்லி
- அம்மா உணவகத்திற்கு காலை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் வந்தனர்.
- முன்னெச்சரிக்கையாக தட்டில் பல்லியை பார்த்தவர் உள்பட 10 பேரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செஞ்சிரோட்டில் அம்மா உணவகம் உள்ளது. இந்த அம்மா உணவகத்திற்கு காலை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் வந்தனர்.
அப்போது ஒருவர் சாப்பாடு தட்டில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அம்மா உணவகத்தில் இருந்த சாப்பாடுகளை எல்லாம் அப்புறப்படுத்தினர்.
முன்னெச்சரிக்கையாக அந்த தட்டில் பல்லியை பார்த்தவர் உள்பட 10 பேரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story