என் மலர்
தமிழ்நாடு

தருமபுரி அருகே விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய அன்புமணி ராமதாஸ்
- குண்டல்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் காயங்களுடன் ரோட்டில் அமர்ந்து இருந்தனர்.
- காரை நிறுத்த சொன்ன அன்புமணி ராமதாஸ் காரில் இருந்து கீழே இறங்கி சென்று காயம் அடைந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்க செய்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 9 மணியளவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கம்பைநல்லூர் உள்ள பா.ம.க. கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவுக்கு காரில் கட்சி நிர்வாகிகளுடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது குண்டல்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் காயங்களுடன் ரோட்டில் அமர்ந்து இருந்தனர்.
உடனே காரை நிறுத்த சொன்ன அன்புமணி ராமதாஸ் காரில் இருந்து கீழே இறங்கி சென்று காயம் அடைந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்க செய்து அவருக்கு ஆறுதல் கூறினார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து அந்த பெண்ணையும் காயம் அடைந்த மற்றவரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியிருக்கிறது. இந்த விபத்து குறித்து மதிகோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.