என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பத்தூரில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தலைமை ஆசிரியை திடீர் மரணம்
    X

    திருப்பத்தூரில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தலைமை ஆசிரியை திடீர் மரணம்

    • ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமாரியம்மன், முத்துவேல், பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதில் நிர்வாகிகள் சிங்கராயர், ஸ்டீபன், ஜோசப் செல்வராஜ், வெங்கட்ராகவன், கருப்பையா, மீனாட்சி சுந்தரம், ஜெயகாந்தன், பெரியசாமி, ராஜா முகமது, நேரு, வேலாயுத ராஜா, மால் முருகன், சரவணன், மதுசூதனன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தில் நாகப்பன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி என்பவரும் கலந்து கொண்டார். இரவு வரை நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×