என் மலர்
தமிழ்நாடு

முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
- மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
152 அடிஉயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்து வந்தது. இன்று காலை அது முற்றிலுமாக நின்றுவிட்டது. வரத்து இல்லாத நிலையில் 644 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 121.70 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 55.61 அடியாக உள்ளது. 415 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது. 23 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 62.16 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 16 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.