என் மலர்
தமிழ்நாடு

சென்னையில் 'கிறிஸ்துமஸ்' களைகட்டியது: நட்சத்திரம், குடில் அலங்காரம், ஜொலிக்கும் மின் விளக்குகள்
- கிறிஸ்தவர் வீடுகளில் வண்ண அலங்கார தோரண மின் விளக்குகள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கார சீரியல் விளக்குகள் ஜொலித்து வருகின்றன.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர்கள், உறவினர்கள், கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை:
சென்னையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை மாநகரம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு களைகட்டி உள்ளது.
நாளை (25-ந்தேதி) இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.
கிறிஸ்தவர் வீடுகளில் வண்ண அலங்கார தோரண மின் விளக்குகள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கார சீரியல் விளக்குகள் ஜொலித்து வருகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர்கள், உறவினர்கள், கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் ராயப்பேட்டை 'எக்ஸ்பிரஸ் அவென்யூமால், வேளச்சேரி பீனிக்ஸ் மால், அண்ணாசாலை 'ஸ்பென்சர் பிளாசா, வடபழனி 'போரம்' மால், அமைந்தகரை 'ஸ்கை வாக்' அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை பார்க்க பொதுமக்கள் கூட்டம் திரண்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி இன்று நள்ளிரவு சென்னை சந்தோம் கிறிஸ்தவ பேராலயம், பெசன்ட்நகர் ஆலயம் சின்னமலை ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தேவாலயம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம், கிறிஸ்துமஸ் குடில், கலை நிகழ்ச்சி ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. சென்னை சாந்தோம் பேராலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
பெசன்ட் நகர் வேளாங்கன்னி ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி, ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், உள்ளிட்ட ஆலயங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.