search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தருமபுரி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் மக்கள் அலறியடித்து ஓட்டம்
    X

    தருமபுரி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் மக்கள் அலறியடித்து ஓட்டம்

    • பள்ளிப்பட்டி, ஆண்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்று காலை இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.
    • இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எல்லைபகுதிய்ல் காடுகள் இருப்பதால் அடிக்கடி உணவு தேடியும், குடிநீருக்காகவும் காட்டு யானைகள் ஊருக்கு புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

    இதனால் அந்த யானைகள் வயல்கள், தோட்டங்களில் புகுந்து பயிர்களை தின்று மிதித்து நாசம் செய்து விடுகின்றன.பின்னர் வனத்துறையினர் வந்து அந்த யானைகளை காட்டு பகுதிக்குள் மீண்டும் திருப்பி அனுப்புவர்.

    இது போன்ற காட்டு யானைகளால் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எப்போதுமே பீதியுடன் வசிக்கும் நிலைதான் உள்ளது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டி அருகே உள்ள சவுளூர், கருப்பனம்பட்டி, பள்ளிப்பட்டி, ஆண்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்று காலை இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.

    அவை ஊருக்குள் புகுந்து வீதிகளில் உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி சென்றனர்.

    இது குறித்து வன துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் வந்து இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர்.

    Next Story
    ×