என் மலர்
தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- தற்போதைய பொருளாதார சூழலில் தொகுப்பூதியத்தில் குடும்பச்செலவை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உட்படுகிறார்கள்.
- தமிழக அரசு, கடந்த 38 நாட்களாக போராடி வரும் கணினி உதவியாளர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 906 பேர் கணினி உதவியாளர்களாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வட்டாரங்களில் உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை கண்காணிக்கும் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கோரி கணினி உதவியாளர்கள் கடந்த 1.11.2022 முதல் தொடர் விடுப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு கட்ட களப்போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் இன்னும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
தற்போதைய பொருளாதார சூழலில் தொகுப்பூதியத்தில் குடும்பச்செலவை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, கடந்த 38 நாட்களாக போராடி வரும் கணினி உதவியாளர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.