search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னரின் அதிகார எல்லை சட்ட கருத்தரங்கம்
    X

    கவர்னரின் அதிகார எல்லை சட்ட கருத்தரங்கம்

    • தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. தலைமை தாங்கினார்.
    • திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, சட்டத் துறை தலைவர் மூத்த வக்கீல் இரா. விடுதலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    சென்னை:

    தி.மு.க. சட்டத்துறை சார்பில் அரசியல் அமைப்பு சட்டமும், கவர்னரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்தது. தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. தலைமை தாங்கினார்.

    இணைச் செயலாளர்கள் பரந்தாமன் எம்.எல்.ஏ., மணிராஜ், தண்டபாணி, ராதாகிருஷ்ணன், அருள் மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, சட்டத் துறை தலைவர் மூத்த வக்கீல் இரா. விடுதலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    இதில் துணைச் செயலாளர்கள் சந்துரு, பச்சையப்பன், பட்டி ஜெகநாதன், வைத்தியலிங்கம், தினேஷ் மற்றும் தலைமை கழக வழக்கறிஞர்கள் சூர்யா வெற்றி கொண்டன், கவி கணேசன், எம்.எல்.ஜெகன், கோ.மறைமலை,சென்னை மாவட்ட அமைப்பாளர்கள் ரகு, பாபு, மருது கணேஷ், கணேச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் துரை கண்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×