என் மலர்
தமிழ்நாடு

அரசின் கடன்: அண்ணாமலை அவதூறு பரப்பலாமா?-கே.எஸ்.அழகிரி கண்டனம்
- தமிழ்நாடு அரசின் கடனை குஜராத் அரசோடு ஒப்பிடுகிறார்.
- நடைபயணத்தில் அண்ணாமலை பேசும் போது, பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடைபயணத்தில் அண்ணாமலை பேசும் போது, பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார். தமிழ்நாடு அரசின் கடனை குஜராத் அரசோடு ஒப்பிடுகிறார். அண்ணாமலையின் முதுகு அவருக்கு தெரியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு 9 ஆண்டுகளில் ரூபாய் 100 லட்சம் கோடி கடன் உயர்ந்திருக்கிறது என்பதை அண்ணாமலை அறிவாரா?
தமிழகத்தில் கடன் யார் ஆட்சியில் எவ்வளவு அதிகரித்தது என்பதை அரைகுறை அண்ணாமலை ஆய்வு செய்யாமல் அவதூறான கருத்துகளை பரப்பலாமா ? 2001 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலிருந்து வெளியேறும் போது 34,540 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன் அளவு 2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலம் நிறைவடையும் போது 63848 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. 5 ஆண்டு காலத்திற்குள் கடன் அளவு சுமார் 84 சதவிகிதம் அதிகரித்தது. இதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.