என் மலர்
தமிழ்நாடு

இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு தகுந்த பாடம் புகட்டப்படும்- வைகைசெல்வன் பேச்சு
- ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. அழிந்து போகும் என பேசி வந்தவர்கள் தற்போது வாயடைத்து போய் உள்ளனர்.
- தி.மு.க., அரசு வாரிசு அரசியலை நோக்கி பயணித்து கொண்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பெதப்பம்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன் பேசியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. அழிந்து போகும் என பேசி வந்தவர்கள் தற்போது வாயடைத்து போய் உள்ளனர். காரணம் இந்தியாவிலேயே கிளைச் செயலாளர் முதலமைச்சராகும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான். தி.மு.க., அரசு வாரிசு அரசியலை நோக்கி பயணித்து கொண்டுள்ளது. அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இனிவரும் காலங்களில் தி.மு.க.விற்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்றார்.
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
அ.தி.மு.க. ஆட்சியில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் ரூ. 400 கோடி அளவில் மக்களுக்கு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கட்டிடங்கள்- நலத்திட்டங்களை தற்போது தி.மு.க.வினர் தாங்கள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.