என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • சுற்றுலா பயணிகள் வருகை இன்று அதிகரித்து காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    தமிழக காவிரி கரையோர பகுதிகளில் மழையின்மையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாகவும் கர்நாடகா அணைகளில் இருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்ட நீராலும் தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கன அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 3 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

    இந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 4000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வேகம் சற்று அதிகரித்து உள்ளது.

    கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதாலும், தற்போது நீர்வரத்து அதிகரிப்பாலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை இன்று அதிகரித்து காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து கோட்டமடுவு வரை பரிசலில் சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×