என் மலர்
உலகம்

பியானோ வாசிக்கும் 100 வயது தாத்தா- டுவிட்டரில் வைரல்
- இசை எவ்வாறு ஆன்மாவை எளிதில் குணப்படுத்தும் என்பதற்கு வீடியோ உதாரணமாக உள்ளது.
- வீடியோவில் தாத்தா பியானோவில் பெப்பியான டிராக் வாசிக்கிறார்.
இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் வைரலாக பரவுவது உண்டு. அந்த வகையில் 100 வயது தாத்தா ஒருவர் பியானோ வாசிக்கும் வீடியோ டுவிட்டரில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.
இசை எவ்வாறு ஆன்மாவை எளிதில் குணப்படுத்தும் என்பதற்கு இந்த வீடியோ உதாரணமாக உள்ளது. வீடியோவில் தாத்தா பியானோவில் பெப்பியான டிராக் வாசிக்கிறார். வீடியோ முழுவதும் அவர் பியானோவில் மிகவும் சீராக வாசிக்கிறார். இந்த வீடியோ 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
சில பயனாளர்கள் தாத்தாவின் திறமையை வியந்து பாராட்டுகின்றனர். இந்த வீடியோ அழகாக மட்டுமல்ல பலருக்கு உத்வேகமாகவும் இருப்பதாக பாராட்டுக்கள் பெற்றுள்ளது.
Next Story