என் மலர்tooltip icon

    மற்றவை

    • வியட்நாமை ஆக்கிரமித்த பிரஞ்சுப் படைகள்.
    • சிறுவன் பிரஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான்.

    உருவத்தைப் பார்த்து எடை போடலாமா?

    கூடாது. அதற்கு இந்த வரலாற்று சம்பவம் சாட்சி..

    ''1911-ம் ஆண்டு வியட்நாமை ஆக்கிரமித்த பிரஞ்சுப் படைகள், 'கலகம் செய்தார்கள்' என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றைக் கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது.

    வண்டியில் இடம் இல்லாததால், ஒல்லியாகவும் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, 'இவன் தானாகவே செத்துவிடுவான்' என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர்.

    பிற்காலத்தில் அந்தச் சிறுவன் பிரஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான். அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின்!'

    -அழகு கூத்தையா

    • சில விசயங்களை ரொம்ப எளிதா செய்துட்டு போய்டுவோம்.
    • நம்மில் பலர், எதிர் பாலரிடம் பழகாமல் கற்பனையில் அவர்களை பற்றிய ஒரு பிம்பம் வைத்திருப்போம்.

    முதன் முதலில் தாம்பத்திய வாழ்க்கைக்கு போகும் போது, நம்மில் பலருக்கு ஏற்படும் தடுமாற்றம். ஒருவரை ஒருவர் திருப்தி செய்திட வேண்டுமே எங்கிற கவலை எல்லாம் எவ்ளோ மன அழுத்தத்தை கொடுக்கும்ன்னு அவசியம் புரிஞ்சிக்கணும் இல்லியா…?

    சில விசயங்களை ரொம்ப எளிதா செய்துட்டு போய்டுவோம். ஆனால் அதே விசயத்தை யாரையாவது இம்ப்ரெஸ் பண்ண கூடுதல் கவனமெடுத்து செய்தோம்ன்னா, அப்போ பார்த்து சொதப்பிடும். சரியா வராது..! இது ஏன்னா.. 'சரியா செய்யனுமே' என்கிற பதட்டம்.

    எக்ஸாம் ஹால், மேடை பேச்சு, விளையாட்டு போட்டிகள் மாதிரி பல இடங்களில் சொதப்பிய அனுபவம் நம்ம எல்லோருக்கும் இருக்கும். இதே Anxiety நம்ம செக்ஸ் பார்ட்னரை அதிகமா இம்ப்ரெஸ் பண்ண வேண்டிய இடமான படுக்கை அறையில் நுழைந்ததுன்னா தாம்பத்தியம் ஒரு வில்லங்கம் ஆகிடும்.

    பொதுவா கலவி ஒரு ஜாலி மேட்டர். ஆனால், சில நேரங்களில் ஒருவித பதட்டம் சேர்ந்து சொதப்பி அது பெரிய இம்சை ஆகிடும். A kiss can start, A kiss can End the relationship'ன்னு சொல்வாங்க. அக்மார்க் உண்மை. பதட்டம் இல்லாமல் அணுகுபவர்களுக்கு முத்தம் ஆரம்பமாகவும். பதட்டத்தோட அனுகுபவர்களுக்கு அதுவே முடிவாகவும் இருக்க கூடும்.

    ஆண் பெண் இருவருக்குமே இந்த பதட்டம் வரக்கூடியது தான். பெண்களுக்கு, "தான் அழகா இருக்கோமா? குண்டா இருக்கோமா? அவனுக்கு தன்னை பிடிக்காம போய்டுமா? மாதிரியான எண்ணங்களும், ஆண்களுக்கு, "தன்னால் செயல்பட முடியாமல் போய்டுமா? விரைவில் சோர்ந்திடுவோமா? தன்னோட பார்ட்னரை திருப்தி படுத்த இயல்லாமல் போயிடுமா" போன்ற எதிர்மறை எண்ணங்களும் பதட்டத்தை குடுக்கும்.

    இயல்பான கலவிக்கு 'செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டீரோன் தான் உடலில் அதிகமா சுரக்கும். அதே மாதிரி பயம் / பதட்டம் போன்ற சமயங்களில் உடலில் அட்ரினலின் மாதிரி தற்காப்பு (Stress) ஹார்மோன்கள் தான் அதிகமா சுரக்கும். செக்ஸ் ஹார்மோன் இணையோடு கூடுன்னு சொல்லும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சண்டை போடு இல்லேன்னா ஓடு'ன்னு சிக்னல் குடுக்கும். கொஞ்சம் குழம்பி தான் போவோம் இல்லையா…??

    உடலில் எந்த குறையும் இல்லாமல் எல்லாம் சரியாக இருந்தும் இந்த மாதிரி 'திருப்தி படுத்தனுமே' என்கிற பதட்டத்தில் சொதப்புவர்கள் தான் அதிகம். இதுக்கு வயது வித்தியாசமே இல்லை. சொல்லப்போனால் சின்ன வயசில் தான் சொதப்பல்கள் அதிகமா இருக்கும். கொஞ்சம் அனுபவம் கிடைச்ச உடனே இந்த பதட்டம் குறைஞ்சிடும்.

    ஆனால் சொதப்பிய உடனே பெரும்பாலானோருக்கு முதலில் தங்கள் உடல் மீது தான் சந்தேகம் வரும். ஏன்னா சமூகம் நம்மளை அப்படி டியூன் பண்ணிருக்கு. நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவுன்னு ஏதேதோ பேர் வச்சு நம்மை குழப்பி வச்சிருக்கு. எதுவும் பிரச்சனை இல்லை. சின்ன பதட்டம் அவ்ளோ தான். ரிலாக்ஸா அணுகினால் இது ஒரு பிரச்சனையே இல்லைன்னு புரிஞ்சிக்கலாம்.

    நம்மில் பலர், எதிர் பாலரிடம் பழகாமல் கற்பனையில் அவர்களை பற்றிய ஒரு பிம்பம் வைத்திருப்போம். அது பெரும்பாலும் தவறாக தான் இருக்கும். அங்க தான் நாம முதல்ல தடுமாறுறோம். பயமும், குழப்பமுமாகவா வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்…? தெளிவும் மகிழ்ச்சியும் வேண்டாமா??

    ஜெய்த்தே ஆக வேண்டும் என்ற ராணுவ தயார் நிலையில் அணுகாமல் முதலில் இன்டிமசியை ஏற்படுத்திக்கனும். அதுக்கு இதை தான் செய்வதுன்னு இல்லை.. காதல் விளையாட்டில் என்ன வேணா செய்யலாம். பார்ட்னருக்கு குடுக்கும் மசாஜ், பரஸ்பரம் செய்து கொள்ளும் தீண்டல்கள், இது மாதிரி உடலினை பற்றிய கூச்சம் தயக்கம் எல்லாம் விட்டுட்டு மற்றவர் உடலை ஆராய தொடங்குங்கள்ன்னு மன நல மருத்துவர்கள் சொல்றாங்க.

    தாம்பதியம் பற்றி நீங்கள் அறிந்தது புரிந்தது எல்லாம் தவறு. புதிதாக கற்றுக் கொள்ள தொடங்குங்கள்ன்னு சொல்றாங்க. முக்கியமா பார்ட்னரோட ரசனை, உடல் மொழி, உடல் அங்கங்கள் எல்லாவற்றையும் ரசிக்கவும் ரசிச்சா மட்டும் போதாது, கண்டிப்பா வாய் விட்டு அவங்க கிட்ட சொல்லணும். இது அவரை மேலும் உற்சாகமா இயங்க வைக்கும். 'இணைக்கு பிடிச்சிருக்கு' என்பது தான் பதட்டத்தை போக்கும் வெற்றிக்கான தாரக மந்திரம்.

    பல பெண்களுக்கு இருக்கும் எண்ணம், தான் உடையை கழட்டினாலே போதும். ஆண் தயாராகிடுவான் என்பது. உண்மை இல்லை ! ஆணை புகழும் வார்த்தைகள் அவனை மேலும் உற்சாகத்துடன் ஈடுபடுத்தும். வார்த்தை இல்லையா..? பிரச்சனை இல்லை. உடல் மொழியில் காட்டுங்கள். இறுக்கி அணைப்பது, நகத்தால் கீறுவது, கடிப்பது, மாதிரி மறைமுகமாக உற்சாகப்படுத்தலாம். பதட்டமே இல்லாமல் செயல்படுவான். எந்த உணர்ச்சியும் காட்டாமல் தேமேன்னு இருப்பது ஆணை எமோஷனலாக கொலை செய்வதற்கு சமம். அப்படி தேமேன்னு இருக்கிற பெண்ணிடமும் விடாமல் முண்டி அடிப்பது அந்த பெண்ணை ரேப் செய்வதற்கு சமம். இதுக்கு இரண்டு பேரும் சும்மா இருக்கலாம்.

    ஆமா, சும்மா இருப்பது முக்கியம். சரியான 'வேவ் லெங்க்த்' கிடைக்கிற வரை காதலில் திளைத்து முன்னேறி கூடலுக்கு செல்லும் வரை சும்மா இருப்பது முக்கியம். மறுபடி மறுபடி முயற்சி செய்து தோற்பது இருவருக்கும் பதட்டத்தை அதிகரிக்கும். பதட்டம் மேலும் மேலும் தோல்வியை கொண்டு வரும். ஒரு 15 நாள் கலவி பற்றிய சிந்தனைக்கே செல்லாமல் அமைதியாக மற்ற வேலையை பார்த்து விட்டு ரிலாக்ஸா பேசி சிரித்து மகிழலாம். சேர்ந்து சினிமா, கோவில் பாடல்கள் ரசிக்கலாம். சீண்டிக்கலாம், இடிச்சுக்கலாம்… காதல் வலுப்பெற காத்திருந்து கலவிக்கு மனதை தயார் செய்யலாம்.

    -டாக்டர் எம். சரவணக்குமார்

    • நமது உடலை அக்கறையுடன் பராமரிக்காவிடில் உறுப்புகள் பழுதாகி விடும்.
    • நம்மால் முடிந்தவரை,நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    ''மூலதனம்'' என்பது முதல்..

    'முதல்'' என்பது பொருள்.

    அந்தப் பொருளைத் தான் உடல் என்றனர்.

    நமது உடலை அக்கறையுடன் பராமரிக்காவிடில் உறுப்புகள் பழுதாகி விடும். அல்லது உடல் தன் இயக்கத்தையே நிறுத்தி விடக் கூடும்.எனவே, நம்மால் முடிந்தவரை,நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..

    பசித்த பின் புசிப்பது, ஆரோக்கியத்திற்கு ஆகாதவற்றைப் புறந்தள்ளுவது, உடல் உழைப்பு, ஆழ்ந்த உறக்கம், பரபரப்பற்ற அமைதியான உள்ளம் ஆகியவை சீரான உடல் இயக்கத்திற்கு முக்கியம்.

    ஒருநாள் காலை நேரம் சிந்தனையாளர் டால்ஸ்டாய் நடந்து போய்க் கொண்டு இருந்தார்.

    எதிரே ஒரு இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தான். உடனே அவர் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார்.

    "எதற்காக இப்படிச் செய்கிறாய்?'' என்று கேட்டார் டால்ஸ்டாய்.

    "ஐயா... நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்கத் தான் ஆசைப்படுகிறேன் ஆனால் அதற்கு மூலதனமாக என்னிடம் எதுவும் இல்லையே? வறுமை வாட்டுகிறது

    தற்கொலை செய்து கொள்வது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை'' என்றான் அந்த இளைஞன்.

    உடனே டால்ஸ்டாய்,

    "நான் உனக்கு நூறு ரூபிள் தருகிறேன். அதற்குப் பதிலாக உனது ஒரு விரலை மட்டும் தருவாயா?'' என்றார் டால்ஸ்டாய்.

    "ஒரு விரலா! அது முடியாது.''

    "சரி, நூறு ரூபிள் தருகிறேன்... ஒரு கண்ணைத் தருவாயா?''

    "ஒரு கண்ணா! இதுவும் முடியாது.''

    "அப்படியென்றால் ஆயிரம் ரூபிள் தருகிறேன். இரண்டு கால்களில் ஒன்றை மட்டுமாவது கொடு.''

    இளைஞன் கோபத்தோடு சட்டென்று சொன்னான்,"எதுவும் என்னால் கொடுக்க முடியாது. உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.

    அப்போது டால்ஸ்டாய் சிரித்துக் கொண்டே, "தம்பி... இங்கே வா. உன்னிடம் விலை மதிக்க முடியாத உடல் உறுப்புகள் இருக்கின்றன என்பதை இப்போது நீ புரிந்து கொண்டாயா?இதுதான் மூலதனம். இதை நன்றாகப் பராமரித்துப் பயன்படுத்து. நீ விரைவிலேயே செல்வந்தனாவாய்'' என்றார்.

    அப்பொழுது தான் அந்த இளைஞன் தனது உடம்பின் மதிப்பை உணர்ந்தான்.

    ஆம்.,நண்பர்களே..ஆரோக்கியம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாதது. அதனை இழந்த பின் தான் பலரும் அதன் அருமையை உணர்கிறார்கள்.

    -ஜெய் சரவணன்

    • ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம்.
    • உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான்.

    எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அது போல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்.

    ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழி நடத்திக் கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காற்றோடு கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள் நுழைகிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது. இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம்.

    மனித உடம்பு தூசு, தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி, எண்ணங்களின் தாக்குதல், உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

    இந்த பாதிப்புகள் இரண்டு விதம்; ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட விதம். ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தால் அது நல்ல விதம், பொறாமைப்பட்டால் அது கெட்ட விதம்.

    இவற்றை நாம் கண்டறிய இயலாது, அது சாத்தியமும் இல்லை. ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி, மன அசதி, மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும். நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.

    இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான். குளிக்கும் போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம்.

    நீர் உச்சந்தலையில் படும் போது, உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது. உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் உண்டாகும்.

    இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர்களைத்தான். எல்லார் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்லவிதமாக இருக்காது. இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.

    கோயிலுக்கு போய் வந்தவுடன் குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம். கோயில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம். அத்தகைய கதிர்வீச்சை, குளித்து நீருடன் கலந்து வீனாக்கக் கூடாது என்பதால்தான்.

    -இந்திரா செளந்திரராஜனின் "சிதம்பர ரகசியம்" நூலில் இருந்து...

    • தன்னுடன் இருந்த நண்பர்களுக்கும் புட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர்.
    • பாட்டி பதட்டமில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னாராம் : "காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது.

    அதிகாலை...

    சென்னை யானைக்கவுனி பகுதியில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

    அது எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலம். இளமைக்காலத்தில் பெரும்பாலும் வறுமையில்தான் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

    அப்போது அவர் குடியிருந்த இடம்தான் யானைகவுனி.

    எம்ஜிஆர் வழக்கமாக வாக்கிங் போகும் வழியில், சாலையோரம் அமர்ந்து, புட்டு அவித்து விற்றுக் கொண்டிருப்பாராம் ஒரு பாட்டியம்மா. அந்த பாட்டியிடம் தனக்கும், தன்னுடன் இருந்த நண்பர்களுக்கும் புட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர்.

    அப்படி ஒரு நாள் காலையில் வாக்கிங் போய்விட்டு, அந்த பாட்டியிடம் புட்டு வாங்கச் சென்ற எம்.ஜி.ஆர்., தன் கையில் இருந்த காசை எண்ணிப் பார்த்து விட்டு கொஞ்சம் தயங்கி நின்றார்.

    "பாட்டி, இன்றைக்கு புட்டு வேண்டாம். நாளைக்கு வாங்கிக்கறேன்."

    பாட்டி நிமிர்ந்து எம்ஜிஆர் முகத்தை பார்த்தார்.

    "ஏம்பா..?"

    தயக்கத்துடன் சொன்னார் எம்ஜிஆர்: "பாட்டி.. நான் எனக்கு மட்டும் வாங்க வரவில்லை. என்னோடு இருக்கும் மூணு பேருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால்..?"

    "என்ன ஆனால்?" என்று பாட்டி கேட்க..

    "அவ்வளவு பேருக்கும் சேர்த்து வாங்கக் கூடிய அளவுக்கு இன்னைக்கு என் கையில் காசு இல்லை பாட்டி" என்றார் எம்.ஜி.ஆர்.

    "பரவாயில்லே! நாளைக்கு வரும் போது காசு குடுப்பா " என்று சொல்லி எல்லோருக்கும் சேர்த்து புட்டை பார்சல் செய்து எம்.ஜி.ஆர். கையில் கொடுத்தாராம்.

    எம்.ஜி.ஆர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.பாட்டி கொடுத்த பார்சலை வாங்காமல் எம்.ஜி.ஆர். ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்க,

    பாட்டி:"என்னப்பா யோசிக்கிறே ?"

    "ஒண்ணும் இல்ல, ஒருவேளை நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்னை ஏமாத்திட்டா என்ன பண்ணுவே பாட்டி ?"

    பாட்டி பதட்டமில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னாராம் : "காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது. வரலேன்னா உங்க எல்லோருக்கும் பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. அது தருமக் கணக்குல சேர்ந்துடும்."

    பாட்டி சாதாரணமாகச் சொன்ன இந்த பதில் எம்ஜிஆரின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எம்ஜிஆர் பிற்காலத்தில் செய்த எத்தனையோ தானதர்மங்களுக்கு, அந்தப் பாட்டிதான் காரணமாக இருந்திருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.

    சொன்னபடியே மறுநாள் தேடிச் சென்று அந்தப் பாட்டிக்கு கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்துவிட்டாராம் எம்.ஜி.ஆர்.

    பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அந்தப் பாட்டி பற்றி விசாரித்து, தேடிச் சென்று உதவி செய்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.

    -ஜான்துரை ஆசீர் செல்லையா

    • எல்லா இசை கருவிகளையும் முறையாக பலரிடமும் கற்றவர்.
    • 8வது டிகிரியை ராஜா வாங்க வேண்டும் என தன்ராஜ் ஆசைப்பட்டார்.

    இசை சொல்லி கொடுத்த குருவிடமே சவால் விட்டவர் இசைஞானி!..

    ராஜான்னா சும்மாவா!..

    70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் தனது இசையால் திரையுலகையும், ரசிகர்களையும் கட்டி ஆண்டவர் இசைஞானி இளையராஜா. அறிமுகமான 'அன்னக்கிளி' படத்திலேயே அற்புதமான பாடல்களை கொடுத்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

    80களில் ராஜாவின் இசையை நம்பியே 90 சதவீத திரைப்படங்கள் உருவானது.

    ராஜா இசையமைக்க சம்மதித்துவிட்டால் அந்த படம் ஹிட் என்றே கணித்த காலம் அது.

    படத்தின் கதாநாயகன், கதாநாயகி யார் என முடிவாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் இளையராஜாவை ஒப்பந்தம் செய்துவிடுவார்கள்.

    அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றிக்கு அவர் தேவைப்பட்டார்.

    இளையராஜா ஏதோ இசைக்கச்சேரிகள் நடத்தி வந்து அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார் என பலரும் நினைக்கிறார்கள்.

    அதுதான் இல்லை.

    அவர் எல்லா இசை கருவிகளையும் முறையாக பலரிடமும் கற்றவர்.

    இளையராஜாவுக்கு கிடார், பியானோ மற்றும் வெஸ்டர்ன் இசையை சொல்லிக்கொடுத்தவர் தன்ராஜ் மாஸ்டர்.

    ஆனால், காலையில் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் வேலை, மாலை இசைக்கச்சேரிகள் என ராஜா பல வேலைகளையும் செய்து வந்ததால் அவரால் தன்ராஜ் மாஸ்டர் வகுப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை.

    இசையில் 8வது டிகிரியை ராஜா வாங்க வேண்டும் என தன்ராஜ் ஆசைப்பட்டார்.

    ஒரு நாள் ராஜாவிடம் 'நீ கண்டிப்பாக 8வது டிகிரியை தேர்ச்சி பெறவேண்டும். அது உன் எதிர்காலத்துக்கு நல்லது. உடனே அந்த தேர்வுக்கு பணத்தை கட்டு' என சொல்ல ராஜாவும் பணத்தை கட்டிவிட்டார்.

    ஆனாலும், வகுப்புக்கு சரியாக செல்லவில்லை.

    ஒருநாள் ராஜா வகுப்புக்கு சென்றபோது 'இனிமேல் என் வகுப்புக்கு நீ வராதே' என மிகவும் கோபத்துடன் சொல்லிவிட்டார்.

    அவரிடம் ராஜா 'எனக்கு சொல்லி கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்க. நானே பயிற்சி எடுத்து 8வது டிகிரியை பாஸ் பண்ணி அந்த வெற்றியை உங்கள் காலடியில் சமர்பிப்பேன்' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

    சொன்னதுபோலவும் செய்தும் காட்டினார். அந்த தேர்வில் 84 மார்க் எடுத்தால் ஹானர்ஸ் என சொல்வார்கள்.

    இளையராஜா 85 மார்க் எடுத்திருந்தார்.

    இதற்கு காரணம் ராஜாவிடம் இருந்த நம்பிக்கை மட்டுமல்ல. அவரின் உழைப்பு, விடாமுயற்சி, இசையில் அவர் காட்டிய ஆர்வம் என எல்லாவற்றையும் சொல்லலாம்.

    இப்படி தனது குருவிடமே சவால் விட்டு ஜெயித்து காட்டி பெருமை சேர்த்தவர்தான் இசைஞானி இளையராஜா.

    -ஸ்ரீரமணர் ராஜஷே்

    • உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • பழச்சாறு, சூப், பாயாசம்,ரசம் போன்ற உணவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம்.

    வெய்யில் அதிகமாகிறது....கவனமாக இருங்கள்.....உங்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள், உங்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி அளவான தண்ணீர் அருந்த வேண்டும்.

    ஒருவேளை, தண்ணீர் குடித்தும் தாகம் அடங்க வில்லை என்றால், உங்கள் உடலுக்குத் தேவையான நுண் சத்துகள் கிடைக்காமல் இருக்கலாம். இதற்கு, தர்பூசணி, இளநீர், மோர், கூழ், பழச்சாறு, வெள்ளரி, நுங்கு, பதநீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கலாம்.

    இது எதையும் செய்யவில்லை என்றால், மலச்சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று பிரச்சனைகள், உடலில் துர்நாற்றம், உடல் சோர்வு, மயக்கநிலை, வாயில் துர்நாற்றம், தலையில் பொடுகு ஏற்படுதல், தலைவலி, கால்வலி என்று எதுவேண்டுமானாலும் ஏற்படலாம்.

    ஒருவேளை....குளிர்ச்சியான பொருட்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், நீர் அதிகம் சேர்க்கும்படி செய்யும் கஞ்சி, வெது வெதுப்பான பழச்சாறு, சூப், பாயாசம்,ரசம் போன்ற உணவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம்.

    இதனால் சிறு சிறு சருமப் பிரச்சனைகள் உள்ளிட்ட பலவற்றை ஓரளவிற்குத் தவிர்க்கலாம். ஆனாலும், தண்ணீர் குடிப்பதற்கு அறிவுறுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

    அவ்வகையில், அதிக வியர்வை வெளியேற்றம், அதிக வெய்யிலில் வேலை செய்பவர்கள், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டே இருப்பவர்கள் (இருக்கிறார்கள்..காலையில் எடுத்துச்செல்லும் தண்ணீர் பாட்டில் மாலை அப்படியே திரும்பி வரும்).....

    இவர்கள்....அவர்களது இல்லத்தரசியிடம் அல்லது அம்மாவிடம் இதுபோன்ற மோரை செய்து கொடுக்கச் சொல்லி, ஒரு பாட்டிலில் ஊற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விடுங்கள்....

    ஒரு கைப்பிடி புதினா, சிறிது இஞ்சி, ஒரு பச்சை மிளகாய்....இவற்றுடன் சிறிது தயிர் அல்லது மோர் சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி, துப்பியை நீக்கி விடவும். இதனுடன் மேலும் தேவையான மோரைக் கலக்கி, உப்பு (தேவையெனில்) சேர்க்கவும். ஒருநாள் கொத்துமல்லி தழை மாற்றிக் கொள்ளலாம். குடித்துக் கொண்டே இருக்கத் தோன்றும் சுவையில் நிச்சயம் இருக்கும்...

    தேவையான நீரும், தாதுக்களும் ஒரு சேரக் கிடைப்பதுடன், வயிற்றுப் பிரச்சனைகளும் சரியாகி, பசியும் நன்றாக எடுக்கும்.

    -முனைவர் வண்டார்குழலி

    • ஜார்ஜ் சென்னையில் ஒரு பெரிய வீடு கட்டி குடியேறுகிறார்.
    • விழுப்புரத்தில் சின்னையா என்று ஒரு தேசியவாதி இருக்கிறார்.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் நன்றாக படித்தவர். இந்திய சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதி அதில் ஜெயித்ததும் இந்தியாவுக்கு வேலைக்கு வருகிறார். ஸ்பெஷல் செட்டில்மெண்ட் ஆபிசராகி, சென்சஸ் அதிகாரியாக பணியாற்றுகிறார். 1920லிருந்து 22 வரை சென்னை முனிஸிபல் கமிஷனராக இருக்கிறார். சீப் செக்ரட்டரியாக கூட பதவி கிடைக்கிறது. கொஞ்ச வருடம் ஒரிஸா கவர்னர். கொஞ்ச வருடம் கொச்சின் திவான் என போகிறது.

    ஜார்ஜ் சென்னையில் ஒரு பெரிய வீடு கட்டி குடியேறுகிறார். ஒன்றரை ஏக்கர் விசாலமாக உள்ள இடத்தில் அந்த பங்களாக மிக அழகாக இருக்கிறது.

    இந்த காலக்கட்டத்தில் விழுப்புரத்தில் சின்னையா என்று ஒரு தேசியவாதி இருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள். மூன்றாவது மகன் பிறந்துதுமே அவர் வெள்ளை அரசால் கைது செய்யப்படுகிறார். அவருக்கு ஏழு வருட சிறை தண்டனை கிடைக்கிறது. தலைவன் இல்லாததால் குடும்பமே வறுமையில் தத்தளிக்கிறது. உண்ண உணவில்லை... உணவுப்பஞ்சம்...பசி....பட்டினி.

    மூன்றாவது மகன் பசி பொறுக்காமல் சோறு கிடைக்குமென கேட்டதும் ஒரு நாடகக்கம்பெனியில் சேர்கிறான். நன்றாக பாடுபவன் என்பதால் வாய்ப்பு உடனே கிடைக்கிறது. கம்பெனிகளில் நடிகனாகி பின் தன் அன்னையை ஒரு நாள் வளர்ந்த பிறகு சந்திக்கிறான்.

    இப்போது வயிற்றுப்பசி அடங்கி விட்டது. ஆனால் நாடகத்தில் சேர்ந்து அது தான் தொழில் என்றானதும் நடிப்புப்பசி தொடங்கி விட்டது. அந்தப்பசி மட்டும் அடங்கவில்லை அவனுக்கு. நாடகங்களிலிருந்து சினிமாவில் சேர்ந்து முதல் படத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பெயர் பெற்ற நடிகனாகிறான். கை நிறைய காசு, பணம்...

    சிறு வயதில் வறுமையில் வாடிய அன்னை. சிறையில் வாடிய தந்தை. கூடவே அண்ணன்களும் இருக்க எல்லோரும் சேர்ந்து வாழ ஒரு வீடு இதே சென்னை மாநகரத்தில் வாங்கத்தீர்மானிக்க அப்போது ஒரு வீடு வருகிறது.

    வெள்ளைக்காரர் கவர்னர் ஜார்ஜ் வாழ்ந்த அதே பங்களா. அப்பாவுக்கு இதை விட மன சந்தோஷம் தரும் விஷயம் வேறென்ன இருக்க முடியும்? அந்த வீட்டை அப்பா சின்னையா மன்றாயர் பெயரிலேயே வாங்குகிறான். இரண்டு வருடங்கள் அந்த வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. இரண்டு வருட புதுப்பித்தலுக்குப்பிறகு அன்னை இல்லத்தில் குடியேறுகிறார்கள்.

    அந்த மூன்றாவது மகன் நம் அருமை சிவாஜி அவர்கள் தான். அந்த ஒரிசா கவர்னர் ஜார்ஜ் டி.போக். அவர் வாங்கிய வீட்டுக்கு அன்னையின் பெருமையால் வைத்தப்பெயர் 'அன்னை இல்லம்'.

    வெள்ளையர் வாழ்ந்த வீட்டை அவர்களால் சிறைக்கனுப்பப்பட்ட ஒரு தேசியவாதியின் பிள்ளையே வாங்க முடிகிறதென்றால் காலம் செய்யும் தீர்ப்பு தானே இது.

    -செல்வன் அன்பு

    • ஓய்வுக்குப் பிறகு, குழந்தைகள் திருமணத்துக்குப் பிறகு பொழுது போகாது தான்.
    • கூட்டுக் குடும்பமாக இருக்கலாம், அதில் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒப்புதல் இருந்தால்.

    குழந்தைகள் வளரும் போதே பையனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுய வருமானம் அவசியம்னு சொல்லி வளர்த்துங்க.

    18 வயசிலிருந்தே குழந்தைகளை சுயமா முடிவெடுக்க விடுங்க. தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாமே தவிர அவங்க வாழ்க்கையையும் நாமே வாழ ஆசைப்படக் கூடாது.

    அவங்க வருமானத்தை எதிர்பார்க்காத அளவுக்கு முன்கூட்டியே நமக்கான சேமிப்பு, வருமானத்தை திட்டமிடுங்க.

    கல்வி, திருமணத்துக்கென்று நம் இருப்பை சுத்தமாகக் காலி செய்து விட்டு அப்புறம் அவர்களை எதிர்பார்த்திருக்கும் நிலமையைத் தவிர்க்க வேண்டும்.

    ஓய்வுக்குப் பிறகு, குழந்தைகள் திருமணத்துக்குப் பிறகு பொழுது போகாது தான். இதுநாள் வரை வேலை, குடும்ப நிர்வாகம்னு ஓடிட்டு இருந்ததுல நாம் இழந்த விசயங்களுக்கு இப்ப நேரம் ஒதுக்கலாம். இரண்டாவது தேனிலவு போகலாம். அதை விட்டுட்டு திருமணமான குழந்தைகளையே துரத்திக் கொண்டு இருக்கக் கூடாது.

    திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் வச்சுடுங்க. தட்டுத்தடுமாறி எல்லாத்தையும் கத்துக்கட்டும். பிரச்சனைகள் வந்தால் சமாளிக்கட்டும். ஓரளவுக்கு ஒருத்தருக்கொருத்தர் புரிதல் வந்த பிறகு தேவைப்பட்டால் கூட்டுக் குடும்பமாக இருக்கலாம், அதில் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒப்புதல் இருந்தால்.

    பிரச்சனைக்கு தீர்வு சொல்றேன்னு பொண்ணோட அம்மாவும் தலையிட வேண்டியதில்லை, பையனோட அம்மாவும் தலையிட வேண்டியதில்லை.

    குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம், சேமிப்பு எதுவாக இருந்தாலும் உதவி தேவைப்படும் போது மட்டும் பெத்தவங்க அளவோடு தலையிட்டால் போதும். அவங்களே கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

    குறிப்பாக தினமும் ஃபோன் பண்ணி லைவ் அப்டேட்ஸ் நாமும் செய்யக் கூடாது. அவங்களையும் செய்ய வைக்கக் கூடாது.

    இறக்கை முளைத்த குஞ்சுகளைப் பறக்க விட்டுவிட வேண்டும். அதன் உலகை அது ரசிக்கட்டும். அதன் உணவை அது தேடட்டும். அதன் கூட்டை அதுவே கட்டி சந்ததிகளை உருவாக்கட்டும்.

    -தி.தமிழ்ச்செல்வி

    • 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும்.
    • சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது.

    ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி. எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா அவ்வளவுதான்.

    உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை:

    1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா 2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா.

    16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது. அது தான் சிம்பொனி! இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ்பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படுகிற ஜோசப் ஹைடன் (1732-1809). மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர்தான் குருநாதர்.

    ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது? ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்? எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்? ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும். இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்றுதான் அழைக்கப்படும்.

    சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை? அது எப்படி இருக்க வேண்டும்?

    இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

    1. The Fast Movement: காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை . உறவினர்கள், நண்பர்கள், விஐபிகள் போன்றவர்கள் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசை துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.

    2. The Slow Movement: இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள். இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.

    3. The Dance Number: திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.

    4. An Impressive Fast Movement: இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.

    மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்.

    -சிங்கார வேலன்   

    • வாழைப்பூவை பருப்புடன் சமைத்து உண்ண தாது விருத்தி அடையும்.
    • காரை பழத்தினை காலை மாலை உண்டுவர உள் வெப்பமாகன்று தாது பலப்படும்.

    தாது என்பது விந்து.

    தாது பலப்பட..

    ஓரிதழ் தாமரை இலையை நாள்தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர ஒரு மண்டலத்தில் தாது பலவீனம் தீரும்.

    அம்மான் பச்சரிசி இலையை தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டு வர தாது பலப்படும்.

    அம்மான் பச்சரிசியை கீழாநெல்லியுடன் சமன் கலந்து காலை மதியம் இரு வேலையும் எருமை தயிரில் உண்ண தாது இழப்பு தீரும்.

    கருவேலம் பிசின் நெய்யில் வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட தாது பலப்படும்.

    ஒரு கிராம் தாமரை விதையை அரைத்து பாலில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர தாது வளர்ச்சி அடையும்.

    துளசி விதை சூரணம் ஐந்து அரிசி எடை தாம்பூலத்துடன் சேர்த்துக்கொள்ள தாது கட்டும்.

    வறுத்த திப்பிலி பொடி அரை கிராம் தேனில் காலை மாலை கொடுத்து வர தாது இழப்பு தீரும்.

    கோரைக்கிழங்கு சூரணம் ஒரு கிராம் காலை மாலை தேனில் கொள்ள தாது விருத்தி உண்டாகும்.

    தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது பலம் மிகும்.

    பிரண்டை உப்புடன் சாதிக்காய் சூரணம் சேர்த்து நெய்யில் கொடுக்க தாது இழப்பு தீரும்.

    தாலிக் கீரையை பருப்புடன் சமைத்து நெய் சேர்த்து உண்டு வர விந்து இழப்பு நீங்கி தாது பலப்படும் உடல் குளிரும்.

    கானா வாலை சமூகம் தூதுவேளை பூ முருங்கைப்பூ ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ள தாது பலப்படும்.

    வாழைப்பூவை பருப்புடன் சமைத்து உண்ண தாது விருத்தி அடையும்.

    காரை பழத்தினை காலை மாலை உண்டுவர உள் வெப்பமாகன்று தாது பலப்படும்.

    நீர்முள்ளி விதை சூரணம் 40 கிராம் நெருஞ்சில் விதை 20 கிராம் வெள்ளரி விதை 10 கிராம் சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி லிட்டராக காய்ச்சி பனங்கல்கண்டு கலந்து காலை மாலை 100 மில்லி அளவாக ஒரு வாரம் கொள்ள தாது பலம் உண்டாகும்

    வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பால் விட்டரைத்து எலுமிச்சங்காய் அளவு காய்ச்சிய பாலில் கலக்கி காலை மாலை 40 நாள்கள் கொடுக்க தாது நீர்ப்பு நீங்கி மிடுக்கு உண்டாகும்...

    - மரபு வாழ்வியல் ஆலோசகர் மு.ரமேசு

    • நம் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான்.
    • பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் நம் மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

    காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது.

    நம் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.

    ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?

    பைக் நிற்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.

    ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான்.

    காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது, ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் நம் மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

    10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சனைகள் வரும்,

    முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்க்கும் திறன் குறைந்து விடும்.

    ×