என் மலர்
புதுச்சேரி

ஆஸ்கார் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். திரைப்பட குழுவினருக்கு புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை வாழ்த்து
- தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன்.
- உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"நாட்டு நாட்டு" பாடலின் மூலம் ஆஸ்கார் விருது வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன். இன்று அவர்கள் ஆஸ்கார் விருது வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கும், பாடலாசிரியர் சந்திரபோசுக்கும், இயக்குனர் ராஜமவுலிக்கும், நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
Next Story