என் மலர்tooltip icon

    ரஷ்யா

    • இந்த பீர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட்.
    • இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.

     ரஷிய பீர் பிராண்ட் ஒன்று தனது பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்த பீர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட்[Rewort]. மகாத்மா காந்தி உருவம் பொறித்த இந்த பீர் கேன்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பீர் கேன்களில் அதில் மகாத்மா G என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

    மது அருந்துவதற்கு எதிரான தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இழைக்கப்பட்ட அவமானம் இதுவென்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, இந்த பீர் கேன்களில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை அகற்றுமாறு பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கப்பலில் சுமார் 1 லட்சம் டன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன.
    • தகவலறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்தனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை அருகே சீன சரக்கு கப்பல் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறும் அபாயம் இருப்பதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ரஷியாவின் பால்டிக் கடற்பகுதியில் அன் யாங்-2 என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. சீனாவுக்குச் சொந்தமான அந்த கப்பலில் சுமார் 1 லட்சம் டன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன.

    சகலின் நெவெல்ஸ்கி நகரில் உள்ள உஸ்ட்-லுகா துறைமுகம் அருகே சென்றபோது அந்த கப்பல் எதிர்பாராதவிதமாக தரை தட்டியது. இதுகுறித்து தகவலறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்தனர்.

    பின்னர் அந்த கப்பலில் சிக்கித் தவித்த 20 பணியாளர்களையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே அந்த கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது.

    இதனால் கப்பலில் இருந்து எண்ணெய் கசியும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்காரணமாக சகலின் நெவெல்ஸ்கி பிராந்திய கவர்னர் வலேரி லிமரென்கோ அங்கு அவசர நிலை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த கப்பலை அங்கிருந்து மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே இந்த கப்பல் சிக்கிக் கொண்டது குறித்து கடலோர போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை ஆழமற்றது என்பதால் கப்பலின் என்ஜின் தரையில் சிக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது.

    • வீட்டில் போலீஸ் சோதனையின்போது தண்ணீருக்காக சமையலறைக்கு சென்றார்
    • அதிபர் புதினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல.

    ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் தங்களின் அண்டை நாடான உக்ரைன் சேருவதை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது.

    3 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில் இரண்டு பக்கங்களிலும் உயிர்சேதங்களும், மக்கள் இடப்பெயர்வும் நிகழ்ந்துள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் உதவி செய்து வருகின்றன.

    இந்நிலையில் உக்ரைன் மீது தொடுத்த போரை கண்டிக்கும் விதமாக அதிபர் புதினை விமர்சித்த ரஷிய பாடகர் தனது வீட்டின் ஜன்னல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

    ரஷிய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை போலீஸ் சோதனையின் போது ஜன்னலில் இருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

    உக்ரைன் ராணுவத்திற்கு நன்கொடை அளித்ததாகவும், அதிபர் விளாடிமிர் புதினை "முட்டாள்" என்று அழைத்ததாகவும் அதிகாரிகள் அவரை விசாரித்து வந்தனர்.

    மேலும் உக்ரைன் ராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    அறிக்கையின்படி, அவரது  வீட்டில் போலீஸ் சோதனையின்போது தண்ணீருக்காக  சமையலறைக்குச் சென்றதாகவும், பின்னர் ஜன்னலை திறந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது.

    புதின் மற்றும் உக்ரைன் போரை ஸ்ட்ரோய்கின் சமூக ஊடகங்களில் பலமுறை விமர்சித்துள்ளார்.

    கடந்த 2022 இல் தனது சமூக வலைதள பதிவில், இந்த முட்டாள் [புதின்] தனது சொந்த மக்கள் மீதும் சகோதர தேசத்தின் மீதும் போரை அறிவித்தார்" என்று பதிவிட்டிருந்தார். அதிபர் புதினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல.

    உக்ரைன் போரை வெளிப்படையாக விமர்சித்த ரஷிய பாலே நடனக் கலைஞர் விளாடிமிர் ஷ்க்லியாரோவ், கடந்த நவம்பரில் ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் குதித்து இறந்தார். 

    • குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.
    • சர்வதேச விவகாரங்களில் இந்தியா-ரஷியா இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை தொடரும் என்றார்.

    மாஸ்கோ:

    இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிபர் புதின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

    75 ஆண்டுக்கு முன் நடைமுறைக்கு வந்த அரசமைப்பு சட்டம், திறன்வாய்ந்த அரசு அமைப்புகளை கட்டமைக்கவும், இந்தியாவின் சுதந்திர, ஜனநாயக வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டது.

    அப்போது முதல் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சர்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளது.

    சர்வதேச ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்குகிறது.

    இந்தியா உடனான எங்கள் உறவுகளை மிகவும் மதிக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் ஆக்கப்பூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து கட்டமைக்கவும், சர்வதேச விவகாரங்களில் இந்தியா-ரஷியா இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை தொடரவும் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் நீடிக்கும் என தெரிவித்தார்.

    • வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

    சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடைபெறும் செயல்களை வீடியோ எடுத்து பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஷ்கோடலேரா என்ற இளம்பெண் பாம்பை கையில் வைத்து விளையாடிய காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார்.

    அப்போது அவர் கையில் பாம்பை பிடித்து கொண்டு போஸ் கொடுப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. உற்சாகமிகுதியில் ஷ்கோடலேரா பாம்பை மேலே தூக்கிய போது திடீரென பாம்பு அவரின் மூக்கை கடித்தது. இதனால் வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. நெட்டிசன்கள் பலரும் ஷ்கோடலேராவின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். ஒரு பயனர், பணம் சம்பாதிப்பதற்காக விலங்குகளை பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், இதுபோன்று பாம்புகளை வைத்து விளையாட யார் அனுமதித்தார்கள்? இது மிகப்பெரிய தவறு என பதிவிட்டிருந்தார்.



    • ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
    • கடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது என்றார் புதின்.

    மாஸ்கோ:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார். அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் டிரம்ப், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் ஏற்பட்டிருக்கவே இருக்காது. இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்தவேண்டும். உடனடியாக அதை நிறுத்துவதற்கு ரஷியா முன்வர வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிரம்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், அப்போது அதிபராக இருந்திருந்தால் 2022-ல் உக்ரைன் போர் வந்திருக்காது. டிரம்ப் புத்திசாலி நபர் மட்டுமல்ல, ஒரு நடைமுறை சார்ந்த நபரும் கூட. அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ரஷியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.

    • இறந்து பிறக்கும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
    • 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16,000 குறைவாகவும் உள்ளது.

    குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷியா இணைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ.81,000) கணிசமான ஊக்கத்தொகையை ரஷிய அரசு வழங்குகிறது.

    இந்த திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர மாணவர்களாகவும், 25 வயதுக்குட்பட்டவர்களாகவும், கரேலியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

    இறந்து பிறக்கும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், திடீரென நோய் பாதிப்பு காரணமாக குழந்தை இறந்துவிட்டால் ஊக்கத்தொகை ரத்து செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    மேலும், ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இளம் தாய்மார்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்களா என்பதை குறிப்பிடவில்லை, மேலும் குழந்தை பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்குப் பிறகான செலவுகளுக்கு உதவ கூடுதல் தொகையை பெறுவார்களா என்பதையும் குறிப்பிடவில்லை.

    இதனிடையே, ரஷியாவின் வரலாற்றில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 5,99,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையையும், 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16,000 குறைவாகவும் உள்ளது. 

    • உக்ரைனின் டொனேட்ஸ்க் பிராந்தியத்தின் பெரும் பகுதியை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.
    • கடந்த இரண்டு மாதமாக சண்டையிட்டு தற்போது குராகோவ் என் நகரை கைப்பற்றியதாக ரஷியா சொல்கிறது.

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான சண்டை 3-வது வருடத்தை நிறைவு செய்ய இருக்கிறது. என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்புள்ளதாக சிறு நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. ஆனால் டொனால்டு டிரம்ப் இதை எவ்வாறு தீர்த்து வைப்பார் என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில்தான் ரஷியா தற்போது ஒரு நகரை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள குராகோவ் என்ற நகரை பிடிக்க ரஷியப் படைகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சண்டை நடத்தி வந்தன. உக்ரைனின் முக்கிய நகரமாக விளங்கிய குராகோவை கைப்பற்றிவிட்டோம் என ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டொனேட்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நகரம் அத்துடன் சேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

    ஆனால் உக்ரைன் இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே தங்கள் நாட்டின் குர்ஸ்க் எல்லையில் உக்ரைன் ராணுவம் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது என ரஷியா தெரிவித்திருந்தது. இதை அறிவித்த ஓரிரு நாளில் உக்ரைன் நகரை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.

    குராகோவ் தொழிற்சாலைகள் கொண்ட மண்டலமாகும். நீர்த்தேக்கம் மற்றும தெர்மல் பவர் பிளன்ட், தெற்கு உக்ரைனுக்கும், கிழக்கு பகுதிக்கும் இடையில் மிகப்பெரிய தேசியநெடுஞ்சாலை ஆகியவற்றை கொண்டுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் இங்கு 7 ஆயிரம் முதல் 10 வரையிலான மக்கள் இருந்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது. போர் தொடங்குவதற்கு முன்னதாக இதைவிட இரண்டு மடங்கிற்கு அதிகமான மக்கள் அங்கு வசித்து வந்தனர்.

    இந்த நகர் கடந்த இரண்டு மாதங்களாக ராக்கெட் தாக்குதல், டிரோன் தாக்குதல், கடுமையான வெடிகுண்டு தாக்குதல்களால் சின்ன பின்னமாகியுள்ளது.

    போக்ரோவ்ஸ்க் என்ற நகரையும் முற்றுகையிட ரஷிய ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    2022-ல் ரஷியா சட்டவிரோதமாக டொனேட்ஸ்க், அதன் அருகில் உள்ள லுஹான்ஸ், தென்கிழக்கில் உள்ள கெர்சன், சப்போரிஸியா ஆகிய நான்கு மாகாணங்களை தன்னுடன் இணைத்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருவதாகல்லை இந்த 4 மாகாணங்களில் ஒன்றை கூற முழுமையாக இணைக்க முடியவில்லை.

    • ரஷியாவின் குரோஸ்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டது.
    • உக்ரைன் டிரோன்களை வான் பாதுகாப்பு சிஸ்டம் தாக்கியதால் அனுமதி மறுக்கப்பட்டதாக ரஷியா தெரிவிப்பு.

    அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி 38 பேர் உயிரிழந்தது துயரமான சம்பவம் என அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் இடம் ரஷிய அதிபர் புதன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    துயரமான சம்பவம் ரஷியாவின் வான் பகுதிக்குள் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடை பிரார்த்திக்கிறேன் என அஜர்பைஜான் அதிபரிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ரஷிய அதிபர் புதின் மாளிகை வெளியிட்டுள்ளது.

    மேலும் அத்துடன் "விமான விபத்து ஏற்பட்ட நேரத்தில் கிரோஸ்னி, மொஸ்டோக், விளாடிகாவ்காஸ் ஆகியவற்றின் மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு சிஸ்டம் பதிலடி தாக்குதல் நடத்தியது" எனத் தெரிவித்துள்ளது.

    அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான J2-8243 விமானம் கிரோஸ்னியில் தரையிறங்க இருந்த நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கஜகஸ்தானில் உள்ள அக்டாவில் தரையிறங்க விமான வேண்டுகோள் விடுத்து தரையிறக்க முயற்சித்தபோது தரையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உயிரிழந்தனர்.

    பின்னர் வான்பாதுகாப்பு சிஸ்டம் அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். அதற்கான அடையாளங்கள் விமானத்தில் தென்பட்டதாக சந்தேகம் எழுப்பப்ட்டது.

    பின்னர் முதற்கட்ட விசாரணையில் விமானத்தின் மீது நேர தாக்குதல் மற்றும் தொழில்நுட்ப வெளிப்புறு குறுக்கீடு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானது தெரியவந்தது என அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தெரிவித்திருந்தது.

    விமான விபத்துக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்காக நிலையில், உக்ரைன் டிரோன்களை தாக்குவதாக ரஷியா தவறுதலாக தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    • கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர்
    • உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது.

    உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியா 12,000 வீரர்கள் வரை அனுப்பி வைத்ததாக உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் கூறின. இந்நிலையில் போரில் அதிக எண்ணிக்கையிலான வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர். அங்கு தாங்கள் நடத்தும் தாக்குதல்களில் சுமார் 3000 வட கொரிய வீரர்கள் பலியானதாகவும், உக்ரைன் படைகளால் கைது செய்யப்பட்ட காயமடைந்த வடகொரிய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.

    தென் கொரியாவும் இந்த உயிரிழப்புகளை உறுதி செய்துள்ளது. இருப்பினும் மேலும் புதிய வீரர்கள், இலக்குகளை மோதி அழிக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷியாவுக்கு அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தென் கொரிய முப்படைகளின் கூட்டு தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷிய மற்றும் வட கொரிய இராணுவத் தலைவர்கள் இந்த வீரர்களை மனித கேடயமாகக் கருதி செலவழிக்கின்றனர்.

    தெரிந்தே பல சந்தர்ப்பங்களிலும் உக்ரேனிய படைகளுக்கு எதிரான நம்பிக்கையற்ற தாக்குதல்களுக்கு உத்தரவிடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இவை ஒரு முன்பே கணிக்கப்பட்ட கூட்டு உயிரிழப்புகள் என்று அவர் விவரித்தார்.

    மேலும் வரும் நாட்களில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை அனுப்ப ஜோ பைடன் ஒப்புதல் அளிப்பார் என்று தெரிவித்தார். முன்னதாக உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் 3 ஆம் ஆண்டை நெருங்கி வருகிறது.

     

    • இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது என்றார் அதிபர் மேக்ரான்.
    • அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மாஸ்கோ:

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

    மன்மோகன் சிங் ஒரு சிறந்த அரசியல்வாதி. பிரதமராகவும், பிற உயர் பதவிகளில் பணியாற்றியபோதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவதிலும் அவர் நிறைய சாதித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் தனிப்பட்ட பங்களிப்பை அளித்தார். அவருடன் நான் பலமுறை பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரை நினைவு கூருவோம் என தெரிவித்தார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்:

    இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது. மன்மோகன் சிங்கின் ஆளுமையில் இந்தியா ஒரு சிறந்த மனிதரையும், பிரான்ஸ் ஒரு உண்மையான நண்பரையும் இழந்துவிட்டது. அவர் தனது வாழ்நாளை தனது நாட்டிற்காக அர்ப்பணித்தார். எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன என தெரிவித்தார்.

    பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார்:

    இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் மறைவு வருத்தம் அளிக்கிறது. பாகிஸ்தானில் பிறந்த அவர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார். அவரது ஞானம் மற்றும் மென்மையான நடத்தைக்காக அவர் நினைவுகூரப்படுவார். பிராந்திய பிரச்சனைகளில் அவரது அணுகுமுறை பரஸ்பர புரிதல், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை கூட்டு முன்னேற்றத்திற்கு அவசியம் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது. பாகிஸ்தான்-இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் மக்களும், அரசும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசிற்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கின்றன என்றார்.

    அமெரிக்க வெளியுறவு மந்திரியான ஆண்டனி பிளிங்கன் இந்தியா, அமெரிக்கா நட்பு சிறப்பாக செயல்பட மிகச்சிறந்த சாம்பியன்களில் ஒருவராக மன்மோகன்சிங் திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • இந்த விமானத்தில் 62 பயணிகள், ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர்.
    • கிரோஸ்னி மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது

    அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் எம்ப்ரேயர் 190 விமானம் நேற்று முன் தினம் பாகுவில் இருந்து ரஷியாவின் குரோஸ்னி என்ற இடத்திற்கு சென்றபோது அடர் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் திருப்பிடிவப்பட்டு கடைசியாக கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையத்துக்கு திசை மாற்றி விடப்பட்டது. அதன்படி அக்டாவ் விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

    இந்த விமானத்தில் 62 பயணிகள், ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர். இதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் உயிர் பிழைத்தனர். இதில் இரண்டு சிறுமிகள் ஆவார்கள்.

    விமானம் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அல்லது நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணை ஆகிவயற்றில் ஏதாவது ஒன்று தவறுதலாக தாக்கி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என உலகின் பல்வேறு மீடியாக்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.

    இதற்கு முக்கிய காரணம் விமானத்தின் வாள் பகுதியில் ஏவுகணை பகுதிகளில் தாக்கியதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    உக்ரைன் தற்போது ரஷியா மீது டிரோன் தாக்கல் நடத்தி வருகிறது. கிரோஸ்னி மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் டிரோன் ஆக இருக்கலாம் என ரஷியாவின் ஏர் பாதுகாப்பு நிலையம் தகவல் தெரிவித்து அதன்மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கிரோஸ்னி விமான நிலையத்தில் தரையிறக்க விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட பிறகு சிறிது நேரத்தில் வெளியே மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக உயிர்பிழைத்தவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் அஜர்பைஜானி மற்றும் அமெரிக்க அதிகாரிகள், ரஷ்யாவின் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணையால் தான் விபத்து ஏற்பட்டதாக ஜெட் நம்புகின்றனர்.

    அரசு சார்பு அஜர்பைஜான் இணையதளமான காலிபர், Pantsir-S வான் பாதுகாப்பு அமைப்பில் இருந்து ஏவப்பட்ட ரஷ்ய ஏவுகணை விமானத்தை வீழ்த்தியதாக அஜர்பைஜானி அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி உள்ளது. இதே கூற்றை நியூயார்க் டைம்ஸ், யூரோநியூஸ் மற்றும் துருக்கிய செய்தி நிறுவனமான அனடோலுவும் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் விபத்து தொடர்பான கட்டுக்கதைகளை உருவாக்க வேண்டாம் என ரஷியா எச்சரித்துள்ளது. கிரெம்ளின் [ரஷிய அதிபர் மாளிகை] செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணையின் முடிவுகள் வருவதற்கு முன் யூகங்களை உருவாக்குவது தவறானது.

    நாங்கள் நிச்சயமாக இதைச் செய்ய மாட்டோம், யாரும் இதைச் செய்யக்கூடாது. விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

     

    டிமிட்ரி பெஸ்கோவ்

    இதற்கிடையே கஜகஸ்தான் துணைப் பிரதமர் கனாட் போசும்பாயேவ், விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

    விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆடியோ கேட்கப்பட்ட பின்னர்தான் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும்.

    ×