search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர்."

    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்த எஸ். 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #BMW



    பி .எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மோட்டார்சைக்கிள் எஸ். 1000 ஆர்.ஆர். மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது. இது விரைவில் இந்திய சாலைகளில் சீறிப் பாய உள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் குறைந்த எடை அதிக திறன் கொண்டதாக இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

    999 சி.சி. என்ஜின் கொண்ட இது 13,500 ஆர்.பி.எம். வேகத்தில் 207 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். அதேபோல 11 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் 113 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலை விட இதில் 8 ஹெச்.பி. திறன் அதிகமாகும்.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஷிப்ட் காம் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது 6 கியர்களைக் கொண்டது. அத்துடன் ஏ.பி.எஸ். மற்றும் டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி கொண்டது. நான்கு வகையான டிரைவிங் மோட்கள் (சாலை, மழை, டைனமிக், ரேஸ்) ஆகியன இதில் உள்ளன.

    முன்பகுதியில் 6.5 அங்குல திரை உள்ளது. முந்தைய மாடலை விட 11 கிலோ எடை குறைவு. அதாவது இது 197 கிலோ எடை கொண்டது. இதன் விலை ரூ. 20 லட்சத்துக்குள் இருக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    வருவாய் அடிப்படையில் நாட்டிலேயே பா.ஜனதா கட்சி மிகப்பெரிய பணக்கார கட்சியாக உருவெடுத்துள்ளது. 2017-18ம் ஆண்டு பாஜகவுக்கு ரூ.1027.34 கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. #BJP
    புதுடெல்லி:

    அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு வரும் வருவாய் மற்றும் செலவு விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 2017-2018ம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளை அரசியல் கட்சிகள், தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் தற்போது தாக்கல் செய்துள்ளன.

    இந்தியாவில் பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஏ.ஐ.டி.சி., தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசியக்கட்சிகளாக உள்ளன. இவற்றில் காங்கிரஸ் தவிர மற்ற 6 கட்சிகளும் தங்களுக்கு வந்த வருவாய் தகவலை தாக்கல் செய்துள்ளன.

    இந்த 6 கட்சிகளுக்கும் 2011-18ம் ஆண்டில் மொத்தம் ரூ.1198.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் 868 கோடி ரூபாயை 6 கட்சிகளும் செலவு செய்துள்ளன.

    வருவாய் அடிப்படையில் நாட்டிலேயே பா.ஜனதா கட்சி மிகப்பெரிய பணக்கார கட்சியாக உருவெடுத்துள்ளது. 2017-18ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு ரூ.1027.34 கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதில் ரூ989.70 கோடி தொழில் நிறுவனங்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும்பொதுமக்கள் தாமாக முன்வந்து அளித்த அன்பளிப்பாகும். வங்கிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளுக்கு ரூ.31.20 கோடி வட்டி மூலமும் வருவாய் கிடைத்துள்ளது. கட்சி சந்தா மற்றும் கட்டணம் மூலம் ரூ.5.58 கோடி பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2017-18-ல் ரூ.104.84 கோடி வருவாய் வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.51.69 கோடி, தேசியவாத காங்கிரசுக்கு ரூ.8.15கோடி, ஏ.ஐ.டி.சிக்கு ரூ.5.16 கோடி, இந்திய கம்யூனிஸ்டுக்கு ரூ.155 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    வருமானம் எப்படி வந்தது என்ற தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ள 6 கட்சிகளும் செலவு கணக்குகளையும் ஒப்படைத்துள்ளன. இதில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் வருமானத்துக்கு அதிகமாக 65 லட்சம் ரூபாயை செலவு செய்து இருப்பதாக கணக்கு தாக்கல் செய்துள்ளது.

    இந்த கணக்குகளை ஆய்வு செய்ததில் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு வருமானம் கணிசமாக குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. #BJP

    140 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று இங்கிலாந்து 1000-மாவது டெஸ்டில் கால் எடுத்து வைத்துள்ளது. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. #ENGvIND #1000thTest
    1877-ம் ஆண்டு முதன்முதலாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தது. அப்போது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி நடத்தப்பட்டது. அதன்பின் தற்போது 12 அணிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் பெற்றுள்ளது.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டின் விளையாடியதன் மூலம் சுமார் 140 வருட காலத்தில் இங்கிலாந்து 1000-மாவது டெஸ்டில் விளையாடிய முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.



    ஆஸ்திரேலியா 812 டெஸ்ட் போட்டிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 535 போட்டிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.



    இந்தியா 523 போட்டிகளில் விளையாடி 4-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 427 போட்டிகளுடன் 5-வது இடத்திலும், நியூசிலாந்து (426) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் (415) 7-வது இடத்திலும், இலங்கை (274) 8-வது இடத்திலும், வங்காள தேசம் (108) 9-வது இடத்திலும் உள்ளது.
    ×