search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட்மி நோட் 11"

    ரெட்மியின் சமீபத்திய நோட் 11 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு சமீபத்தில் நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் ரெட்மி நோட் 11 சீரிசில் அறிமுகமாகி இருக்கிறது.

    இன்று ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சீனாவில் துவங்கியது. இதில் ஒரு மணி நேரத்திற்குள் 5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்கப்பட்டதாக ரெட்மி அறிவித்தது. இதைத் தொடர்ந்து டபுள் 11 விற்பனை துவங்கிய 1 நிமிடம் 45 நொடிகளில் 2 பில்லியன் யுவான்களுக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை ரெட்மி விற்பனை செய்தது.

     ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ்

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 மாடலில் 6.6 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 920 5ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
    மைக்ரமேக்ஸ் நிறுவனம் என்11 மற்றும் என12 என்ற பெயரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #MicroMax #Smartphones



    மைக்ரோமேக்ஸ் இன்ஃபோமேடிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

    மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்11 மற்றும் இன்ஃபினிட்டி என்12 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா செட்டப், ஏ.ஐ. வசதி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 


     
    மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்12 சிறப்பம்சங்கள்:

    - 6.19 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 18:9:9 ரக டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - 13 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ஏ.ஐ.
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் 4ஜி வோல்ட்இ
    - ஃபேஸ் அன்லாக்
    - கைரேகை சென்சார்



    மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்11 சிறப்பம்சங்கள்:

    - 6.19 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 18:9:9 ரக டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - 13 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ஏ.ஐ.
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் 4ஜி வோல்ட்இ
    - ஃபேஸ் அன்லாக்
    - கைரேகை சென்சார்

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்11 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 என்றும், இன்ஃபினிட்டி என்12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் வொய்லா, புளு லகூன் மற்றும் வெல்வெட் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 

    இவற்றின் விற்பனை டிசம்பர் 26ம் தேதி முதல் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும். புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் மற்றும் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
    இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் நாளை மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. #GSLVF11 #GSAT7A #ISRO
    சென்னை:

    இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் நாளை (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ இன்று தொடங்குகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

    இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்துகிறது.

    3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

    ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இறுதி கட்டபணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று(செவ்வாய்க்கிழமை) பகல் 1 மணி அளவில் தொடங்குகிறது.

    49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது. விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும்.

    மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.  #GSLVF11 #GSAT7A #ISRO
    சென்னை ராயப்பேட்டையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 11ம் தேதி நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPaneerselvam
    சென்னை:

    அதிமுக தலைமையகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டையில் நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.



    இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. #ADMK #EdappadiPalaniswami #OPaneerselvam
    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டம் தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 11-ம் தேதி மதியம் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். #ParlimentWinterSession #SumitraMahajan #AllPartyMeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

    சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு தாமதமாகலாம் என எதிர்க்கட்சிகள் கருதி வந்தன.

    இதையடுத்து, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அறிவித்தது. அதில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குவது எனவும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்தது.



    இதற்கிடையே, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதம் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க எதிர்கட்சிகள் சார்பில் டிசம்பர் 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க முடிவாகியுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 11-ம் தேதி மதியம் 3 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். #ParlimentWinterSession #SumitraMahajan #AllPartyMeeting
    இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. #ISRO #GSAT11 #FrenchGuiana
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் தென்கொரியாவின் ஜியோ செயற்கைக்கோளும் ஏவப்பட்டது.



    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

    5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. #ISRO #GSAT11 #FrenchGuiana
    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3315 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. #VivoV11



    விவோ நிறுவனத்தின் வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ வி11 ஸ்மார்ட்போன் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், கிராஃபிக்ஸ்க்கு மாலி-G72 MP3 GPU, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0 அப்ரேச்சர், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வி11 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 எல்.சி.டி. டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
    - மாலி-G72 MP3 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3315 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் விவோ வி11 ஸ்மார்ட்போன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.2000 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் செப்டம்பர் 27-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் வி11 ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் பிளாக் மற்றும் நெபுளா பர்ப்பிள் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #smartphone



    இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்டெக்ஸ் இந்தியாவில் ஸ்டார்ஐ 11 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் இன்டெக்ஸ் இரண்டு செல்ஃபி கேமராக்களை வழங்கி இருக்கிறது. அதன்படி இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 மாடலில் 8 எம்.பி. மற்றும் 2 எம்.பி. செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 8 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமரா யூனிட்களிலும் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 சிறப்பம்சங்கள்

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. + 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ஸ்டார்ஐ 11 மாடலின் விலை ரூ.4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #VivoV11 #smartphone


    விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 6-ம் தேதி இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை விவோ அனுப்பி வருகிறது.

    இந்நிலையில், அழைப்பிதழில் 06.09.2018-ம் தேதி 11-ஐ அனுபவியுங்கள் என்ற வாசகம் ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி விவோ வி11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்த விவோ வி9 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் வாட்டர் டிராப் போன்ற ஸ்கிரீன் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதே போன்ற அம்சம் ஒப்போ எஃப்9 (ப்ரோ) மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 AIE சிப்செட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 12 + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 25 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் சமீபத்திய படத்தில் கிரேடியன்ட் பாடி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

    இதே போன்ற வடிவைப்பு கொண்ட விவோ X23 ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் தெரியவரும்.
    ×