search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவோ வி15 ப்ரோ"

    விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #VivoV15Pro #Smartphone



    விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டிருக்கும் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் ஏ.ஐ. சூப்பர் நைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வி15 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 64-பிட் 11nm பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. குவாட் பிக்சல் 1/2.25″ சென்சார், f/1.8 
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
    - 8 எம்.பி. ஏ.ஐ. சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, f/2.4
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் டோப்பாஸ் புளு மற்றும் ரூபி ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ வி15 ப்ரோ விலை ரூ.28,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் மார்ச் 8 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    அறிமுக சலுகைகள்:

    - விவோ வி15 ப்ரோ வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகித கேஷ்பேக்.

    - ஸ்மார்ட்போன் வாங்கிய ஆறு மாதத்திற்குள் ஒரு முறை திரையை மாற்றிக் கொள்ளும் வசதி.

    - முன்பணம் இல்லாமல் மாத தவணையில் வாங்கிக் கொள்ளும் வசதி.
    விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #VivoV15Pro #Smartphone



    விவோ நிறுவனம் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. விவோ தனது வி15 ப்ரோ ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய விவோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    அதன்படி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பிரைமரி கேமரா செட்டப், முன்புறம் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மாபர்ட்போனின் கீழ்புறம் பெசல் எதுவும் காணப்படவில்லை. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் சந்தையில் கிடைக்கும் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களில் விவோ நிறுவனத்தின் முதல் மாடலாக இது இருக்கும். புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை என்பதால், இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.



    இத்துடன் ஸ்மார்ட்போனில் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் சூப்பர் AMOLED அல்ட்ரா ஃபுல்வியூ டிஸ்ப்ளே, FHD பிளஸ், 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 11 என்.எம். சிப்செட், அட்ரினோ 612 GPU, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி., 8 எம்.பி. மற்றும் 5 எம்.பி. சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த சென்சார்கள் 4K தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதியை வழங்கும். இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படும் என தெரிகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இதில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது. #OppoR15Pro #smartphone



    ஒப்போ நிறுவனம் தனது மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான ஆர்15 ப்ரோ மாடலை இந்தியாவில் வெளியிட்டது. முன்னதாக அந்நிறுவனம் ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 

    அமேசான் வலைத்தளத்தில் இன்று (ஜனவரி 9) முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் முதல் முறையாக வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு வழங்கியிருக்கிறது. 

    புதிய ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஆன்-செல் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் 20 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 16 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ. பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ ஆர்15 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஆன்-செல் OLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - 20 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7
    - 16 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.0
    - 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபிளாஷ் சார்ஜிங் வசதி

    இந்தியாவில் ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுவதோடு, எக்சேஞ்ச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #Bajaj #motorcycle



    பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியானது. இந்தியாவில் புதிய பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் விலை ரூ.65,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய பவர் அப் வேரியன்ட் முந்தைய மாடலை விட அதிக செயல்திறன் வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

    2019 பஜாஜ் வி15 பவர் அப் மாடலில் நிறங்கள், கிராஃபிக்ஸ், பின்புறம் பேக்ரெஸ்ட் உள்ளிட்டவற்றை புதிதாக வழங்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட மூலப்பொருளால் செய்யப்பட்ட வி சின்னம் வாகனத்தின் பெட்ரோல் டேன்க்கில் இடம்பெற்றுள்ளது.

    எனினும், வி15 பவர் அப் மாடலில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படவில்லை. பஜாஜ் வி15 பிரத்யேக வடிவமைப்பு மோட்டார்சைக்கிளை ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. 137 கிலோ எடையுடன் இந்த மோட்டார்சைக்கிள் நகரம் மற்றும் நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.



    புதிய பஜாஜ் வி15 வெர்ஷனில் 149.5 சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12.8 பி.ஹெச்.பி. பவர், 13 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டுள்ளது. இது முந்தைய வி15 மாடலை விட ஒரு பி.ஹெச்.பி. பவர் மற்றும் 0.3 என்.எம். டார்க் அதிக செயல்திறன் வழங்குகிறது.

    இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்குகிறது. எனினும், இதன் கியர்ஷிஃப்ட் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் யமஹா மாடல்களில் வழங்கப்படுவதை போன்று முதல் கியர் ஷிஃப்ட் டவுன், மற்ற நான்கு கியர்களுக்கு ஷிஃப்ட்-அப் செய்ய வேண்டும். முந்தைய மாடலில் அனைத்து கியர்களும் ஷிஃப்ட் அப் முறையில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.15 லட்சம் மக்களுக்கு கிடைத்து விட்டது என்று ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் தெரிவித்துள்ளார். #pmmodi #Rajasthanpartychief

    புதுடெல்லி:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் அனைத்தும் மீட்கப்படும். மக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று கூறினார்.

    நரேந்திர மோடியின் இந்த வாக்குறுதி பரபரப்பாக பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால், பாரதீய ஜனதா ஆட்சி உருவாகி 4 ஆண்டுகள் கடந்து விரைவில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

    பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சம் ஏன் வரவில்லை? என்று எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்காக கேள்வி விடுத்த வண்ணம் உள்ளன.

    இது சம்பந்தமாக பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஏற்கனவே கூறும்போது, மோடி ஒரு பேச்சுக்காக இவ்வாறு கூறினார். கருப்பு பணத்தை கண்டிப்பாக மீட்போம் என்ற அடிப்படையில் இந்த வார்த்தை பேசப்பட்டது என்று மழுப்பலாக கூறினார்.

    இதற்கிடையே ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் மதன்லால் சைனி பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சமும் வந்து விட்டது என்று கூறி இருக்கிறார்.

    அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, பிரதமரின் ரூ.15 லட்சம் அறிவிப்பு தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பிரதமர் ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது.

    ரூ.15 லட்சம் தருவேன் என்று சொன்னால் அதற்கான பணத்தை மக்களின் கையில் ரொக்கமாக தருவேன் என்று அர்த்தம் அல்ல. ரூ.15 லட்சத்தையும் ரொக்கமாக கையில் கொடுத்து எல்லோரையும் அம்பானியாக ஆக்க முடியாது.

    பிரதமர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேற்பட்ட பலன்கள் கிடைத்துள்ளது.

    அதன்படி பார்த்தால் பிரதமர் அறிவித்த பணம் மக்களுக்கு வந்து சேர்ந்து விட்டது என்று கூறினார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று 2013 சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    அதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, எல்லோருக்கும் அரசு வேலை வழங்கிவிட முடியாது. ஆனாலும், பல்வேறு வகையில் நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம். 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை பெற்று விட்டார்கள் என்று அவர் கூறினார். #pmmodi #Rajasthanpartychief

    மகராஷ்டிரா மாநிலத்தில் நேற்று அமல்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தடையினால் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும், 3 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. #Maharastra #MaharastraPlasticban #Rs15kcroreloss

    மும்பை:

    சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் பொருட்களுக்கு மகராஷ்டிராவில் நேற்று (சனிக்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டது. அதன்படி கடைக்காரர்களும், பொது மக்களும் பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட கரண்டி, தகடுகள், பாட்டில்கள் மற்றும் தெர்மோகோல் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    பாலின்தீன் பைகளை பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் ஏராளமான குழுக்களை ஏற்படுத்தியுள்ளனர். நாளை முதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்க உள்ளது. முதல் தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் இரண்டாவது தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவை பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    பிளாஸ்டிக் தடையால் பாத்திரத்தில் மீன் வாங்கி செல்லும் பெண்கள்

    இந்நிலையில், இந்த பிளாஸ்டிக் தடையினால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்படையும் என பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தடையினால் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும், அந்த தொழிலை நம்பியிருக்கும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த சங்கத்தின் தேசிய பொது செயலாளர் நீமித் புனமியா தெரிவித்துள்ளார். 

    இதனால் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவதோடு, வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாது என பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக மும்பை வியாபாரிகள் பாலிதீன் தடைக்கு மேலும் அவகாசம் தர வேண்டும் என்று கேட்டனர். ஆனால் மராட்டிய மாநில அரசு அதை ஏற்க மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Maharastra #MaharastraPlasticban #Rs15kcroreloss
    இந்திய ரெயில் பாதைகளில் நடைபெறும் விபத்துகளில் தினமும் 15 பேர் உயிரிழப்பதாக ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndianRailway #TrainAccidents #trainaccidentdeath

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஏற்படும் ரெயில் விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் ரெயில் விபத்துக்களில் இறப்பவர்கள் பற்றிய விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். 

    இதற்கு பதிலளித்துள்ள ரெயில்வே நிர்வாகம் 2014-ம் ஆண்டு முதல் மார்ச் 2018 வரை நடந்த ரெயில்வே விபத்துகளில் 23,013 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. 

    அதிகபட்சமாக தெற்கு - மத்திய ரெயில்வே மண்டலத்தில் 3,874 பேர் இறந்துள்ளனர். மத்திய ரெயில்வே மண்டலத்தில் 3,333 பேரும், மேற்கு ரெயில்வே மண்டலத்தில் 2,384 பேரும், வடக்கு ரெயில்வே மண்டலத்தில் 2,127 பேரும், வடக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் 1,738 பேரும், கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் 1085 பேரும், வட கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் 775 பேரும், ரெயில் விபத்துகளில் பலியாகியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.


    கோப்புப் படம்


    குறைந்தபட்சமாக வட மேற்கு ரெயில்வே மண்டலத்தில் 278 பேர் ரெயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் ரெயில் பாதையில் நடக்கும் விபத்தில் தினமும் சராசரியாக 15 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் ரெயில்வே அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 12,598 பேர் ரெயில் விபத்துக்களில் காயமடைந்துள்ளதாகவும், விபத்துக்கள் அதிகமாக தண்டவாளத்தைக் கடக்கும் போது நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndianRailway #TrainAccidents #trainaccidentdeath
    ×