search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்ரிலியா எஸ்.ஆர். 160"

    அப்ரிலியா நிறுவனத்தின் புதிய எஸ்.ஆர். 125 மற்றும் எஸ்.ஆர். 160 ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.


    அப்ரிலியா இந்தியா நிறுவனம் 2022 எஸ்.ஆர். 125 மற்றும் எஸ்.ஆர். 160 ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 1,07,595 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. புதிய ஸ்கூட்டர்களில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. எஸ்.ஆர். 160 மாடல்- ஸ்டாண்டர்டு, கார்பன் மற்றும் ரேஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. எஸ்.ஆர். 160 விலை ரூ. 1,17,494 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     அப்ரிலியா எஸ்.ஆர். 125

    அப்ரிலியா எஸ்.ஆர்.125 மாடலில் 124.45சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு, 3 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.78 பி.ஹெச்.பி. திறன், 9.70 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    எஸ்.ஆர். 160 மாடலில் 160.03 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, 3 வால்வுகள் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.86 பி.ஹெச்.பி. திறன், 11.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 மாடலின் விற்பனை துவங்கியது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #bajajauto


    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் என்.எஸ். 160 மாடலின் புதிய வேரியன்ட் யூடியூபில் வெளியானதை தொடர்ந்து, இதன் விற்பனை துவங்கியுள்ளது. மோட்டார்சைக்கிளின் பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட பல்சர் என்.எஸ்.160 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், புதிய மாடலிலும் 160.3சிசி, 4-வால்வ், சிங்கிள் சிலின்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த இன்ஜின் 15.5 பி.எஸ்., 14.6 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.



    142 கிலோ எடை கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் பல்சர் என்.எஸ்.200 மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற கிராடிள் ஃபிரேம் கொண்டிருக்கிறது. முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறம் 230மில்லிமீட்டர் யூனிட் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் பல்சர் என்.எஸ்.160 அதிக பிரபலமான மாடலாக இருக்கும் நிலையில், ஏ.பி.எஸ். பாதுகாப்பு அதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்படும் பட்சத்தில் புதிய மாடலின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.

    பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி, ஹோன்டா சி.பி. ஹார்னெட் மற்றும் சுசுகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. பல்சர் என்.எஸ்.160 புதிய வேரியன்ட் விலை ரூ.82,630 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போதைய மாடலை விட ரூ.2,000 வரை அதிகம் ஆகும். இந்தியாவில் ஒற்றை டிஸ்க் பிரேக் கொண்ட பல்சர் என்.எஸ்.160 விலை ரூ.80,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #BajajAuto #Pulsar
    பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 மாடலின் வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #bajajauto


    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் என்.எஸ். 160 மாடலின் புதிய வேரியன்ட் யூடியூபில் வெளியாகியுள்ளது. மோட்டார்சைக்கிளின் பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கிறது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் பின்புறம் புதிய அலாய் வீல் வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற அமைப்பு பல்சர் 150 மாடலில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், புதிய மாடலிலும் 160.3சிசி, 4-வால்வ், சிங்கிள் சிலின்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த இன்ஜின் 15.5 பி.எஸ்., 14.6 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    142 கிலோ எடை கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் பல்சர் என்.எஸ்.200 மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற கிராடிள் ஃபிரேம் கொண்டிருக்கிறது. முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறம் 230மில்லிமீட்டர் யூனிட் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கும்.



    இந்தியாவில் பல்சர் என்.எஸ்.160 அதிக பிரபலமான மாடலாக இருக்கும் நிலையில், ஏ.பி.எஸ். பாதுகாப்பு அதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்படும் பட்சத்தில் புதிய மாடலின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.

    பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி, ஹோன்டா சி.பி. ஹார்னெட் மற்றும் சுசுகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய வேரியன்ட் விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், தற்போதைய மாடலை விட ரூ.2500 முதல் ரூ.3000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யபடலாம். #bajajauto #motorcycle
    இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள்களின் புதிய விலையை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள்களின் விலையில் ரூ.559 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவை அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஹோன்டா சிபி ஹார்னெட் 160ஆர் பேஸ் மாடலின் புதிய விலை ரூ.85,234, டாப் என்ட் ஏபிஎஸ் மாடல் ரூ.92,675 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    இதேபோன்று சிரிஆர்250ஆர் பேஸ் மாடல் விலை ரூ.1,64,143 என்றும் டாப் என்ட் ஏபிஎஸ் மாடல் விலை ரூ.1,93,666 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி ஆகும்.

    இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள்களும் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. சிபி ஹார்னெட் 160ஆர் இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருக்கிறது.

    ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் பிரான்டு மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஹோன்டா சிபி ஹார்னெட் 160ஆர் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்தியாவில் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், 2018 சிபிஆர்250ஆர் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×