என் மலர்
நீங்கள் தேடியது "சூர்யா 38"
`இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூரரைப் போற்று’ படத்தில் ரவுடி பேபி கனெக்ஷன் ஏற்பட்டுள்ளது. #Suriya #RowdyBaby
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காப்பான் படம் இறுதி கட்டத்தில் உள்ளது.
தற்போது சூர்யா `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜி.வி.பிரகாஷின் 70வது படமாகும்.
The stunning voice behind #rowdybaby#sandakkara the lovely #Dhee sings for #Suriya38#GV70 ... recorded overseas with this superb talent ... a quirky fun trk onway ... pic.twitter.com/UBH8UqoHP9
— G.V.Prakash Kumar (@gvprakash) April 23, 2019
ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் ஒன்றை, மாரி 2 படத்தில் மிகவும் பிரபலமான ‘ரவுடி பேபி’ பாடலை பாடிய பாடகி தீ பாடி இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. #Suriya38 #GVPrakash
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படக்குழுவில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #SooraraiPottru
`என்ஜிகே', காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை துவங்கிய விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஜேடியாக நடித்து வரும் அபர்ணா பாலமுரளி தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அபர்ணா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன், இந்த செட்டில் உள்ள அனைவருமே அன்பாக உள்ளார்கள். இரும்பு பெண் சுதா மேடம் போன்று யாருமில்லை. மற்றும் அந்த முக்கியமான நபர், அவரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கோபிநாத்தின் மனைவி பார்க்கவியின் கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்து வருகிறார். பார்ப்பதற்கு பார்கவி போலவே இருப்பதால் அவரை இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள்.
சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.
2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
#SudhaKongara #AparnaBalamurali
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 38-வது படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. #Suriya38 #SooraraiPottru
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.
In love with what’s happening here on the sets ...!Here is the #TitleLook of #SooraraiPottru#சூரரைப்போற்று#DirSudhaKongara@gvprakash@nikethbommi@Aparnabala2@editorsuriya@jacki_art@rajsekarpandian@2D_ENTPVTLTD@guneetmpic.twitter.com/fG8zMuith7
— Suriya Sivakumar (@Suriya_offl) April 13, 2019
சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.
2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
#SudhaKongara
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 38-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்பாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya38
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். #Suriya38 #SudhaKongara #MohanBabu
சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 38 படம் தொடங்குவதையொட்டி அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். #Suriya
‘தானா சேர்ந்த கூட்டம்‘ படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம், ‘என்.ஜி.கே’. செல்வராகவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
இதுதவிர, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலமாக சூர்யா மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்துடன் கைகோர்த்துள்ளார். இதில், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் ஆர்யா, சயீஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும், ‘உறியடி 2’ படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

இந்நிலையில், சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படத்தை ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்க இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், படத்தின் இயக்குநர் சுதாவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருக்கிறார் சூர்யா. தன்னுடைய நண்பரும் 2டி நிறுவன நிர்வாகியுமான ராஜசேகரன் கற்பூரபாண்டியனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பிரார்த்தனையின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. #Suriya38 #Suriya
சுதா கோங்கரா இயக்கத்தில் 'சூர்யா38' படத்தின் பூஜை இன்று நடந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா என்டர்டெயின்மெண்ட்டின் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்கு பெறுகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார்.
`இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. #Suriya38
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

தற்போது இப்படத்தின் இறுதி ஆடியோ வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. #Suriya38 #SudhaKongara #GVPrakash
சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் உறியடி 2 படத்தை இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், சூர்யா - சுதா கொங்காரா இணையும் புதிய படத்திற்கு வசனம் எழுதவிருக்கிறார். #Suriya38 #SudhaKongara #VijayKumar
அறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கி, நடித்து வெளியான ‘உறியடி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யா ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. சூர்யா பேசும்போது ‘படக்குழுவினர் இந்த படம் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காது. உங்களை பாதிக்கும் ஒரு படமாக இருக்கும் என்று தெளிவாக சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயக்குனர் விஜயகுமாரை முதன்முறை சந்தித்தபோதே அவரது உண்மைத்தன்மை என்னை ஆச்சர்யப்படுத்தியது.

என் அப்பா படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டதும் கிடையாது. ஒரு இயக்குநரைக்கூட சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும், ‘நடிகரின் மகன்’ என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால், எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்து விஜய் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன்.
சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு விஜய்குமார் தான் வசனம் எழுதுகிறார். #Suriya38 #SudhaKongara #VijayKumar
‘என்.ஜி.கே.’, ‘காப்பான்’ படங்களை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya38 #SudhaKongara
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
2டி எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதை, இது. படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருக்கிறது.

சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படம் சூர்யாவின் 38-வது படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விவேக் பாடல்களை எழுதுகிறார். #Suriya38
#SudhaKongara #GRGopinath
‘என்.ஜி.கே.’, ‘காப்பான்’ படங்களை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படப்பிடிப்பு தளங்களை பார்வையிட படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. #Suriya38 #SudhaKongara
சூர்யா நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் படம் ‘என்.ஜி.கே.’. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடிகளாக ரகுல் பிரீத்திசிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.

கதநாயகியாக சாயிஷா நடிக்க, மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்குப் பிறகு, சூர்யா ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். சூர்யாவே தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது லொகேஷன் பார்ப்பதற்காக ஒளிப்பதிவாளருடன் சண்டிகர் சென்றுள்ளார் சுதா கொங்காரா. மேலும் அமெரிக்காவிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இதற்காக சூர்யா அமெரிக்கா செல்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Suriya #SudhaKongara #Suriya38
சூர்யா - ஹரி கூட்டணி இதுவரை 4 படங்களில் இணைந்திருக்கும் நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இருவரும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya #Hari
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’.
இந்த படத்துடன் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி, சிராக் ஜானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க, அவருடைய சிறப்புப் பாதுகாப்பு பிரிவின் தலைவராக சூர்யா நடிக்கிறார் என்கிறார்கள்.
இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, ஹரி இயக்குகிறார். இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் கிடையாது. புதிய கதைக்களத்துடன் இருவரும் களம் இறங்குகின்றனர். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Suriya #Hari
என்ஜிகே, சூர்யா 37 படங்களை தொடர்ந்து, சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யாவின் 38-வது படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார். #Suriya38
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக `இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இந்த படத்திற்கு பாடல்களை பாடலாசிரியர் விவேக் இணைந்திருக்கிறார். இதுகுறித்து விவேக் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
Great to b penning for d Inspiring @Suriya_offl Sir for the 1st time. Part of #Suriya38
— Vivek Lyricist (@Lyricist_Vivek) July 27, 2018
2D s 36V gave me my 1st big break. Its always exciting 2 associate with @2D_ENTPVTLTD@gvprakash bro has given me a lovely tune. Tks 2 him n #Sudha mam for dis movie. Wish She achieves Big pic.twitter.com/F1DQPhM3vL
`ஊக்கப்படுத்தும் நாயகன் சூர்யாவின் சூர்யா 38 படத்துக்காக முதல்முறையாக பாடல் வரிகளை எழுதுவதில் மகிழ்ச்சி. சுதாவுடன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் சிறப்பான பின்னணி இசையை தந்திருக்கிறார். சுதா பெரிய வெற்றியை அடைய வாழ்த்துக்கள்' இவ்வாறு கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யா 38 படம் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஒரு வித்தியாசமான கதையாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தின் இசையும் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறியிருந்தார். சூர்யா படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Suriya38