என் மலர்
நீங்கள் தேடியது "நாமக்கல் 4 பேர் கைது"


அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்த காலத்தில் ‘எச்-1’ பி விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்), அவர்களின் 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் ‘எச்-4’ விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.
இந்த திட்டத்தால், ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாருக்கும், பெண்களின் கணவர்களுக்கும் அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு வரமாக அமைந்தது.

அந்தக் கடிதத்தில் அவர்கள் ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விடக்கூடாது, அப்படிச்செய்தால் அது பெண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என வலியுறுத்தி உள்ளனர். #H4Visa #H1BVisa


அமெரிக்காவில் எச்.1பி விசாவில் பணிபுரிவோரின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய முன்னாள் அதிபர் ஒபாமா அரசு அனுமதி வழங்கியது. அதற்காக ‘எச் 4’ விசா வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு ஏராளமான இந்தியர்கள் உள்பட வெளி நாட்டினர் பணி புரிகின்றனர்.
இதை எதிர்த்து அமெரிக்காவை சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்பவர் கொலம்பியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் ஒபாமா அரசின் இத்தகைய கொள்கை முடிவால் அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 28, மே 22 மற்றும் ஆகஸ்டு 20-ந்தேதிகளில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரம் குறித்து டிரம்ப் அரசு ஏற்கனவே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தது. அதில் கோர்ட்டு விரும்பினால் ‘எச்4’ விசாவை ரத்து செய்ய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது.
தற்போது எச் 4 விசாவை ரத்து செய்ய வகை செய்யும் புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் தயாராகி விடும் என கோர்ட்டில் பகிரங்கமாக அறிவித்துள்ளது. டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி ‘எச் 4’ விசாவில் பணிபுரிவோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எச் 4 விசாவில் பணிபுரிய 1 லட்சத்து 26 ஆயிரத்து 853 விண்ணப்பங்களுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அனுமதி வழங்கியுள்ளது. இவர்களில் 93 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் 5 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 2 சதவீதம் பேர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள். #H4Visa #Trump #US



தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப்-4 ல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் வருகிற 18-ந்தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த தெரிவுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்யவேண்டும் என குறிப்பிடப்படிருந்தது.
தற்போது அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளிடம் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இல்லை எனில் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் அப்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழிக் கடிதத்தினையும் எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNPSC
பட்ஜெட் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜெ4 மற்றும் கேலக்ஸி ஜெ6 மாடல்களுடன் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், குவால்காம் பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் நெதர்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டு வலைத்தளங்களில் வெளியானது. ஏற்கனவே வெளியான சாம்சங் கேலக்ஸி ஜெ4 மாடலில் 5.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1280 பிக்சல் சூப்பர் AMOLED பேனல், 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கிறது.
இத்துடன் குவாட்-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7570 சிப்செட், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஜெ6 மாடலில் 5.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பேனல், 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #smartphone
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பில் பயின்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கலெக்டர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.
கோவை மண்டலத்தைச் சேர்ந்த, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று 35 மனுதாரர்கள் அண்மையில், வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்பட்ட பயிற்சிகளில் பங்கேற்று, ஆர்.திருநாவுக்கரசு என்ற மாணவர் மாநிலத்திலேயே, குரூப் 4 தேர்வில் தேர்வுகளில் தட்டச்சர் பணிக்காலியிடத்திற்கு முதலாவது மாணவராக தேர்ச்சியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மண்டல வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே, அதிகமான எண்ணிக்கையில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்தான் 35 நபர்கள் குரூப் 4 தேர்வில் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பணிநியமன வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் பழனிசாமி பாராட்டினார். இந்த வெற்றியினை முதல் வெற்றியாக கருதி தொடர்ந்து நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென அவர் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) லதா, கோவை மண்டலத்தைச் சேர்ந்த துணை இயக்குநர்கள் ஓ.எஸ்.ஞானசேகரன் மற்றும் ஜோதிமணி, உதவி இயக்குநர்கள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும் திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.
பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிவரை ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 107 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 4-வது வழித்தட பாதை ஆயிரம்விளக்கு- மீனாட்சி கல்லூரி வரை 12 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 12 சுரங்க ரெயில் நிலையங்கள் உருவாக்கப்படுகிறது.
இதற்கான திட்ட வடிவமைப்பை நிபுணர் குழுவினர் தயாரித்துள்ளனர். டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 6 ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவடையும். இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி இடையே மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் ரூ.85 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதில் 4-வது வழித்தடப்பாதை ஆயிரம் விளக்கு- கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை 12 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.
இதற்கான திட்ட வடிவமைப்பை நிபுணர் குழுவினர் தயாரித்துள்ளனர். டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும். 6 ஆண்டுகளில் பணிகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கே.நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் எழுதிய தேர்வாக இருக்கும். அந்த தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு வித்தியாசமாக நடந்தது. தேர்வு எழுதியவர்களின் பெயர், பதிவு எண், புகைப்படம், தேர்வு நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் பதிவு எண்ணை எழுத வேண்டியதில்லை. வெளிப்படையாக தேர்வு நடத்தி வருகிறோம்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கும் சேர்ந்து ஒரே தேர்வாக நடத்தியதால் அரசுக்கு ரூ.12 கோடி செலவு குறைந்துள்ளது. குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேரின் மதிப்பெண்கள் மற்றும் ரேங்க் பட்டியல் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிடப்பட்டது.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அனுப்பப்படும். அவர்கள் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சான்றிதழ்களை அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். இதனால் தேர்வு எழுதியவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும்.
அதன்பின்னர் குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு 3 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். குரூப்-4 தேர்வு அறிவிக்கும்போது 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது 11 ஆயிரத்து 280 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுப்போம்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வருகிற அக்டோபர் மாதம் வெளியிடப்படும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வு பற்றி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
நேர்முகத்தேர்வு உள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15-ந் தேதிக்குள் வெளியிடப்படும். இதன்மூலம் 1,547 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளிப்படைத்தன்மையாக தேர்வை நடத்துகிறது.
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏற்கனவே 27 கம்ப்யூட்டர் வழித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 50 ஆயிரம் பேருக்கு குறைவான தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வை கம்ப்யூட்டர் வழித்தேர்வாக நடத்த முடியும். அவ்வாறு தேர்வு நடத்தினால் விரைவாக முடிவு வெளியிடப்படும்.
தேர்வாணைய பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #TNPSCExam #tamilnews
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது.
அதையொட்டி பலரும் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவு எப்போது வெளி வரும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை தனது இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிட்டது.
இந்த ரேங்க் பட்டியலில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும், செல்வக்குமார் 33-வது இடத்திலும் கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர். #TNPSC #ExamResult