search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 dead"

    சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெய்ஜிங்:

    சீனா நாட்டின் கியுசூ மாகாணத்தில் உள்ள பான்ராவ் கிராமத்தில் டீய்பான் என்கிற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் 29 பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர்.  இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் மாயமாகினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் படகுகளில் விரைந்து சென்றனர். ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆப்கானிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். #Afghanfloods #Heratfloods
    காபுல்:

    34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு பகுதியில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை தொடர்ந்து 24 மணிநேரமாக கனமழை பெய்தது.

    இதனால் இந்த மாகாணத்தில் சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியதால் உணவு மற்றும் பணப்பயிர்கள் நாசமடைந்தன. அருகாமையில் உள்ள பாமியான் மாகாணத்திலும் கடந்த இருநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. உடன் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. உறைப்பனியில் சிக்கிய சுமார் 400 பேரை மீட்பு படையினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், காணாமல்போன சிலரை தேடும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த மாகாணத்தின் அரசு உயரதிகாரிகள் இன்று தெரிவித்தனர். #Afghanfloods #Heratfloods
    சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகினர் என்றும், மேலும் 10 பேர் மாயமாகினர் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Chinalandslide
    பெய்ஜிங்:

    சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் லின்பென் சிட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இன்று காலை கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கபட்டன. மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதையடுத்து, நிலச்சரிவில் மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். #UttarakhandBusAccident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பேருந்து திஹ்ரி மாவட்டத்தின் சூர்யதார் பகுதியில் ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து அங்கு திஹ்ரி மாவட்ட பேரிடர் மீட்புக்குழு மற்றும் சம்பா மாவட்ட மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்கள மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விபத்தில் பலியானவர்களுக்கு மாநில அரசு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளித்தும் உத்தரவிட்டுள்ளது. #UttarakhandBusAccident
    ×