search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 dead"

    ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
    நகரி:

    ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை.

    இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வீட்டுக்குள் வெப்ப காற்று வருவதால் மக்கள் தூங்க முடியவில்லை.

    வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விஜயநகரத்தில் 2 பேரும், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, சித்தூர், கடப்பா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகினர். மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட 340 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டம் பாதிரி பேட்டில் 114.26 டிகிரி வெயில் பதிவானது

    நெல்லூர் வெங்கடகிரியில் 113.36 டிகிரியும், சித்தூர் தொட்டம்பேடு, குண்டூர் மச்சவரத்தில் 113.18 டிகிரியும், கடப்பா மாவட்டத்தில் முட்டனூரில் 113 டிகிரியும் வெயில் கொளுத்தியது.


    மேலும் மற்ற மாவட்டங்களில் 107.6 டிகிரி முதல் 113 டிகிரிவரை பதிவானது. இதனால் ஆந்திரா முழுவதும் வெயில் தாக்கம் உள்ளது.

    இந்த நிலையில் ஆந்திராவில் வருகிற 25-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்ப காற்று கடுமையாக வீசும் என்று அம்மாநில வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சமயத்தில் பல மாவட்டங்களில் 113 டிகிரி முதல் 118.4 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும் இதில் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளான குண்டூர், பிரகாசம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

    அதேபோல இந்திய வானிலை மையமும் வெப்ப காற்று குறித்து எச்சரித்து உள்ளது. 25-ந்தேதி முதல் ராயலசீமாவில் வெப்ப காற்று கடுமையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.

    காற்றில் ஈரப்பதம் குறைந்ததே வெப்ப காற்று கடுமையாக வீச காரணமாகும்.

    இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் நிலையில் 5 நாட்கள் வெப்ப காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது பொது மக்களை பீதியடைய செய்துள்ளது.
    பிரேசில் நாட்டில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் போலீசாருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். #BrazilBankRobbery
    ரியோ டி ஜெனீரோ:

    பிரேசில் நாட்டின் சியரா மாநிலம் மிலாக்ரஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல், வங்கிகளுக்குள் சென்று  கொள்ளையடிக்க முயன்றது. ஏடிஎம் மையங்களையும் உடைக்க முயற்சித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியாக, பொதுமக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர்.



    பின்னர் போலீசாரின் தாக்குதல் தீவிரமடைந்ததால் பிணைக் கைதிகளை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடினர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சண்டையில் 6 பிணைக் கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். #BrazilBankRobbery
    டிட்லி புயல் காரணமாக ஒடிசாவில் கனமழை பெய்துவரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #TitliCyclone #OdishaRain #Landslide
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கஜபதி மாவட்டம் பாரகாரா கிராமத்தில் நேற்று இடைவிடாமல் மழைபெய்ததால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என சிறப்பு நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் மழை பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் அவர் விளக்கினார்.



    நிலச்சரிவு நடந்த பகுதியில் மேலும் 4 பேரைக் காணவில்லை. அவர்களும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கஞ்சம், கஜபதி, ராயகடா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் முதல்வர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட உள்ளார். #TitliCyclone #OdishaRain #Landslide
    ×