என் மலர்
நீங்கள் தேடியது "12 zodiac signs"
- சித்தர் கூறிய சிறந்த பரிகாரம்.
- அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
கணிதப் பஞ்சாங்கப்படி வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 9.44 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுதலாகிறார்.
மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சனிபகவான் 3-6-2027-ல் அதிசாரமாக மேஷ ராசிக்குச் செல்வார். அதன் பிறகு 20-10-2027-ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதைத்தொடர்ந்து 23-2-2028 இரவு 7.24 வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்ய உள்ளார்.

சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குரு பகவான் திருக்கணிதப்படி
குருபகவான் ரிஷப ராசியில் 1-5-2024 முதல் 14-5-2025 வரை
குருபகவான் மிதுன ராசியில் 14-5-2025 முதல் 2-6-2026 வரை
குருபகவான் கடக ராசியில் 2-6-2026 முதல் 26-6-2027 வரை
குருபகவான் சிம்ம ராசியில் 26-6-2027 முதல் 24-7-2028 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு - கேது (திருக்கணிதப்படி)
ராகு- மீன ராசியில் கேது- கன்னி ராசியில் 30-10-2023 முதல் 18-5-2025 வரை
ராகு- கும்ப ராசியில் கேது- சிம்ம ராசியில் 18-5-2025 முதல் 5-12-2026 வரை
ராகு- மகர ராசியில் கேது- கடக ராசியில் 5-12-2026 முதல் 24-6-2028 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷ ராசிக்கு ஏழரைச் சனியில். விரய சனியும், மிதுன ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், சிம்ம ராசிக்கு அஷ்டமச் சனியும், கன்னி ராசிக்கு கண்ட சனியும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், கும்ப ராசிக்கு ஏழரைச் சனியில் பாதசனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும் நடைபெற உள்ளது.

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ரிஷபம், துலாம், மகர ராசி நேயர்கள் அற்புதமான அனுகூலப்பலன்கள் உண்டாகும். கடகம், விருச்சிக ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்கள் ஏற்படும்.
சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ராசி நேயர்களுக்கு கண்டிப்பாக சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது மிகவும் நல்லது.
சனி பகவான் அருள் பெற எத்தனையோ எளிய பரிகாரங்கள், வழிபாடுகள் உள்ளன.
சனிக்கிழமை தோறும் சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று நீலச்சங்கு, நீலச் செம்பருத்தி, நீலத்தாமரை ஆகிய புஷ்பங்களால் சனியை அலங்கரித்து வழிபடலாம்.
கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.
எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
சனிக்கிழமைதோறும் அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது முடிந்தால் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது நல்லது.
சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது மற்றும் ஜென்ம நட்சத்திர நாளில் கோவிலுக்கு சென்று ஒரு தேங்காயை சமமாக உடைத்து, உடைப்பட்ட தேங்காயில் எள், எண்ணெயை நிரப்பி தீபமேற்றி சனி பகவானை வணங்குவது நல்லது.

சிறந்த பரிகாரம்:
சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஒரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார். அந்த பரிகாரம் வருமாறு:-
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு வியாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கிச் செல்லும்.

அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்துக் கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள்.
இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம்.
இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
- மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.
- ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய சனிப்பெயர்ச்சி பரிகார விபரம்.
சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் 2½ ஆண்டுகள் சஞ்சரிக்கக் கூடியவர். இவர் மார்ச் 29-ந் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது என்றாலும், ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் எவ்வளவு காலம் சஞ்சரிக்கிறது? அவை தரும் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதைப் பொறுத்து அந்த கிரகத்தின் பெயர்ச்சியை மக்கள் அதிகம் கவனிக்கின்றனர்.
அந்த வகையில் சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். குரு ஓராண்டு காலம், ராகு-கேது ஒன்றரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார்கள்.
நவக்கிரகங்களில் ஒரு கிரகம் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக்கூடியது சனி கிரகம் என்பதோடு, அவர் கர்ம காரகன், நீதிபதி போன்று செயல்படுவதால். சனி பெயர்ச்சி முக்கியமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய தற்போதைய சனிப்பெயர்ச்சி பரிகார விபரம் வருமாறு:-
மேஷம்:
அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும்.
ரிஷபம்:
முடிந்தால் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
மிதுனம்:
ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீசக்கரத் தாழ்வாரை தரிசனம் செய்து வர நன்மைகள் கிடைக்கும்.
கடகம்:
முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும். வேப்பி லையை அருகில் இருக்கும் புற்று அம்மன் கோவி லுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சிம்மம்:
தினமும் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவதரிசனம் ெசய்து வரவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
கன்னி:
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமை 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.
துலாம்:
குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்:
துர்க்கை அம்மனை செவ்வாய்க் கி ழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.
தனுசு:
வியாழக்கிழமைகளில் குருவை வழிபடவும்.
மகரம்:
ஆஞ்சநேயருக்கு வெண் ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற் றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்:
விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
மீனம்:
பைரவரை வழிபட்டு வரவும். தேய்பிறை அஷ்டமி திதியை 'பைர வாஷ்டமி' என்று கூறுவார்கள். அன்று பைரவரை வழிபட்டு வர சிறப்புகள் உண்டாகும்.
- கடன் வாங்கும் முன் யோசித்தாலே கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம்.
- ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது.
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும்பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.
கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் கடன்களை தீர்க்கும் பரிகாரங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
மேஷம்
தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் பசுவுக்கு கொடுத்துவர கடன் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷபம்
ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயார் செய்து அதை வெள்ளிக்கிழமை அன்று பசுவிற்கு கொடுத்து வந்தால் கடன்களை அடைத்து சுகம் பெறலாம்.
மிதுனம்
தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வர வேண்டும். மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன் இதனை செய்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கடன் பிரச்சினை தீரும்.
கடகம்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறிது வெல்லக்கட்டியை எடுத்து ஓடும் நீரில் விட வேண்டும். அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று வெல்லக்கட்டியை எடுத்து குரங்குகளுக்கு கொடுத்துவர கடன் பிரச்சினைகள் தீரும்.
சிம்மம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு நிற திரி போட்டு 8 விளக்குகள் ஏற்றிவர கடன்கள் தீர வழி பிறக்கும்.
கன்னி
சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்ய வேண்டும். (நீங்கள் அதை உண்ணக்கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர்வார்த்து ஒரு மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வர கடன் பிரச்சினைகள் தீரும்.
துலாம்
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்ற வேண்டும். இதனை 24 வாரங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நிச்சயமாக கடன்கள் தீரும். வெள்ளிக்கிழமை அன்று அரச மரத்தடியில் உள்ள விநாயகருக்கு 11 அகலில் தீபமேற்றி அதனை 11 முறை சுற்றி வந்து வழிபட்டால் கடன்கள் தீரும்.
விருச்சிகம்
ஓம் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை சொல்ல வேண்டும். லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் பிரசாதமாக வைக்கலாம். 48 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி ஏற்படும்.
தனுசு
வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்ட அல்லது கோவில் கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து வளம் பெருகும்.
மகரம்
சனிக்கிழமைகளில் எள்ளு உருண்டை செய்து தானமாக கொடுத்துவர கடன்தொல்லைகள் தீரும்.
கும்பம்
வியாழக்கிழமை மாலை 5 அல்லது 6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு தானமாய் பிரசாதமாக கொடுத்துவர கடன்கள் அடைபடும்.
மீனம்
தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்க்கிழமை மதியம் 1 அல்லது 2 மணி அல்லது இரவு 8 மணி அல்லது 9 மணிக்குள் கொடுத்துவர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.
- பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார்.
- செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம்.
சிவனின் அம்சமான கால பைரவரை எந்தெந்த நாளில், 12 ராசியினர் வழிட்டுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.
பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். சொர்ண கால பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்
பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் இருக்கும். அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார் என்பதால், ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.

பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.
பைரவர் விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். இத்தகைய சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள் அதற்குரிய கிழமைகளில் வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.

ஞாயிற்றுக்கிழமை
சிம்ம ராசியினர் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், திருமணம் கைகூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி உள்ள ஆண்கள், பெண்கள் இருவரும் ராகு காலத்தின் போது அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
திங்கட்கிழமை
கடக ராசியினர் திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமாள நோய்கள் குணமாகும்.
செவ்வாய்க்கிழமை
மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். செவ்வாய்க் கிழமைகளில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.
புதன்கிழமை
மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி வாங்கும் யோகம் கிடைக்கும்.

வியாழக்கிழமை
தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பைரவருக்கு வியாழக் கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதிகம்.
வெள்ளிக்கிழமை
ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.
சனிக்கிழமை
மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டமசனி, ஏழரை சனி அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லதே நடக்கும் என்பது ஐதிகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச திபம் ஏற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லவை வந்து சேரும்.