search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14 killed"

    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் பேருந்தும் ஜீப்பும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்து பற்றி கேள்விப்பட்ட முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 14 பேர் பலியானதை பற்றி அறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திராவின் கர்னூலில் நடைபெற்ற சாலை விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
    ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், ஜீப்பும் மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    அமராவதி:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் பேருந்தும் ஜீப்பும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மீட்புப்பணிகளின் போது அப்பகுதி மக்கள் திரண்டு உதவு செய்தனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் தெலுங்கானா மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு சென்று திரும்பி வந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கென்யா நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பஸ் விபத்தில் குழந்தை, பெண்கள் உள்பட 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். #KenyaBusAccident
    நைரோபி:

    கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில் இருந்து நைரோபி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் மசாகோஸ் பகுதியில் வந்தபோது லாரி மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் 11 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #KenyaBusAccident
    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Syria #USledstrikes
    சிரியா:

    சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.



    இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என சிரியாவில் செயல்படும் மனித உரிமை அமைப்பினர்  தெரிவித்துள்ளனர். #Syria #USledstrikes 
    ×