என் மலர்
நீங்கள் தேடியது "15 dead"
- பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து குண்டுகளை வீசியது.
- பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.
காபூல்:
பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் ஆதரவளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தலிபான் அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு எல்லையையொட்டி ஆப்கானிஸ்தான் பத்திகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் உள்ள லேமன் உள்ளிட்ட 7 கிராமங்கள் மீது பாகிஸ்தான் அதிரடி வான் வழித் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து சரமாரியாக குண்டுகளை வீசியது.

இந்த குண்டு வீச்சில் பர்மால் முர்க்பஜார் கிராமம் முற்றிலும் உருக்குலைந்தது. வீடுகள் கடும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் உயிர் இழந்து விட்டனர். இவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பலரை காணவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பொது மக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது கோழைத்தனமான தாக்குதல் செயல். ஒருதலைபட்ச வான்வழித் தாக்குதல்.
இந்த தாக்குதலில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் வஜிகிஸ்தான் பகுதியை சேர்ந்த அகதிகள் ஆவார்கள். பலரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம்.
பொதுமக்களின் நிலங்கள், இறையாண்மை ஆகியவற்றை பாதுகாப்பது தங்களின் கடமையாகும். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்தலை பாகிஸ்தான் இன்னும் உறுதிபடுத்தவில்லை. ஆனால் எல்லைக்கு அருகில் உள்ள பயங்கரவாத அமைப்பினரின் மறைவிடங்களை குறிபார்த்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்ற மான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது.
இந்த ஓட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்ததில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. திருமண கோஷ்டியினர் இதில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Peru #Mudslide #Hotel