என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 16 killed
நீங்கள் தேடியது "16 killed"
மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். #Myanmar #WarehouseExplosion
யாங்கோன்:
மியான்மரின் கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கு உள்ளது.
நேற்று முன்தினம் மாலை வெடிமருந்தை எடுத்துச் செல்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் கிடங்குக்கு வந்தனர். அவர்கள் வெடிமருந்தை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு வெடி விபத்து நேரிட்டது.
அதனை தொடர்ந்து கிடங்குக்குள் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. கிடங்குக்குள் இருந்த அனைவரும் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #Myanmar #WarehouseExplosion

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். #MilitantsAttack
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜாஸ்ஜான் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MilitantsAttack
ஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 16 போலீசார் பலியாகினர். #AfghanTalibans
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பக்லான் மாகாணத்துக்குட்பட்ட ஹுசைன்ஹில் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 போலீசார் உயிரிழந்தனர்.
இதேபோல், தக்கார் மாகாணத்தில் உள்ள பசார் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியாகினர். #AfghanTalibans
நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NepalBusAccident
காத்மண்டு:
நேபாளம் நாட்டின் டாங் மாவட்டம், கோராஹி பகுதியில் கிருஷ்ணா சென் இச்சுக் தொழில்நுட்ப பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளி சார்பில் 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் சல்யான் மாவட்டத்தில் உள்ள தாவரவியல்
பூங்காவுக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, டாங் மாவட்டத்தின் துல்சிபூர் பகுதியில் வரும்போது நிலைதடுமாறிய பஸ் திடீரென அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கல்வி சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #NepalBusAccident
மேற்குவங்காளத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிர் இழந்தனர். #Panchayatpolls #violence
கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளிடையே 4 முனை போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
இதற்கிடையில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடையே மோதல் வெடித்தது. அதே போல் பா.ஜ.க. தொண்டர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுபோட வந்த மக்களை கலவரக்காரர்கள் விரட்டி அடித்தனர். செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஒரே நாளில் 16 பேர் உயிர் இழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது நடந்த வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி அங்கு சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதாகவும் எனவே உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ கோரிக்கை விடுத்து உள்ளார். #Panchayatpolls #violence

×

X