என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 17 killed
நீங்கள் தேடியது "17 killed"
டெல்லியில் அர்பிட் பேலஸில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். #ArpitPalace #Delhifire #Delhihotelfire
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் ஓட்டலில் கடந்த 12-ந்தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், ராகேஷ் கோயல் கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி வருவதாக போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் வந்தது.
இதைதொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ராகேஷ் கோயலை கைது செய்தனர். இன்று அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். #ArpitPalace #Delhifire #Delhihotelfire
டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் ஓட்டலில் கடந்த 12-ந்தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் அர்பிட் பேலஸ் ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் என்பவரை தேடி வந்தனர். அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ராகேஷ் கோயல் கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி வருவதாக போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் வந்தது.
இதைதொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ராகேஷ் கோயலை கைது செய்தனர். இன்று அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். #ArpitPalace #Delhifire #Delhihotelfire
மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #FireworksExplosions
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் மிகப் பெரிய பட்டாசுச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டாசு விற்பனை அதிகளவில் நடைபெற்று வந்ததால் பட்டாசுகளை வாங்க மக்கள் குவிவது வழ்க்கம்.
இந்நிலையில், மெக்சிகோ பட்டாசு சந்தையில் நேற்று காலை 9.15 மணியளவில், அங்கு திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த வெடி விபத்தில் 17 பேர் உடல் சிதறி பலியாகிளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #UPBusAccident #PMCondole
புதுடெல்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், உ.பி.யின் மெயின்புரி பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். #UPBusAccident #PMCondole
×

X