search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people arrest"

    • சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி மற்றும் ரேசனில் வழங்கப்படும் மண்எண்ணை உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒரு வீட்டில் சுமார் 95 மூட்டைகளில் 4,750 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி மற்றும் ரேசனில் வழங்கப்படும் மண்எண்ணை உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ரேசன் அரிசி சிக்கியது

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். சிவகுருநாதபுரம் திருமலை ஆண்டவர் கோவில் தெருவில் சோதனை செய்தபோது, ஒரு வீட்டில் சுமார் 95 மூட்டைகளில் 4,750 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் அந்த வீட்டின் மற்றொரு அறையில் 160 கிலோ ரேசன் கோதுமையும், 17 லிட்டர் ரேசன் மண்எண்ணையும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    2 பேர் கைது

    பின்னர் அவற்றை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், சிவகுருநாதபுரத்தை சேர்ந்த பழனிசாமி(வயது 74), தங்கபாண்டி(55) ஆகியோர் என்பதும், அவர்கள் குறைந்த விலையில் வீடுகளில் அரிசிகளை வாங்கி கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மொபட்டுகள் மற்றும் ஒரு மினி லோடு வேனையும் பறிமுதல் செய்தனர்.

    • திருச்சி ரெயில் நிைலய மைதானத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தில்லைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அவர்களிடமிருந்து 18 போதை மாத்திரைகள், ஊசி, பாட்டில் மற்றும் கஞ்சாவைபோலீசா பறிமுதல் செய்து உள்ளனர்

    திருச்சி :

    திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாகரில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர்.

    இதில் திருச்சி ரெயில் நிைலய மைதானத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தில்லைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தில்லைநகர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று பார்த்த போது, தில்லைநகர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராமநாத் (வயது 32), பழைய கருர் ரோடு பகுதியை சேர்ந்த ஆசிக் பாஷா (21) உப்புப்பாறையை சேர்ந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். ஆனாலும் அங்கிருந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட ராமநாத், ஆசிக் பாஷா ஆகியோரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் தான் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்றது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்களிடமிருந்து 18 போதை மாத்திரைகள், ஊசி, பாட்டில் மற்றும் கஞ்சாவைபோலீசா பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு இந்த போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தது, யார் சப்ளை செய்கிறார்கள், நெட்ஒர்க் அமைத்து மர்ம நபர்கள் யார், இதுவரை யார், யாருக்கெல்லாம் போதை மாத்திரை விநியோகம் செய்யப்பட்டு உள்ளது என்று துருவித்துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராமநாத், ஆசிக் பாஷா மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    • அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கையில் சாக்குப்பையுடன் 2 நபர்கள் பேருந்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட தனிப்படை போலீசார்,அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
    • விசாரணையில் இருவரும் அழிந்துவரும் இனமான 29 உடும்புகளை பிடித்து உயிருடன் திருச்சிக்கு கடத்த முயன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கையில் சாக்குப்பையுடன் 2 நபர்கள் பேருந்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட தனிப்படை போலீசார்,அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

    விசாரணையில் இருவரும் கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த ரஜினி(வயது36),மாதவன் (30) என்பதும், அவர்கள் அழிந்துவரும் இனமான 29 உடும்புகளை பிடித்து உயிருடன் திருச்சிக்கு கடத்த முயன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்த தனிப்படையினர், அவர்களிடமிருந்த 29 உடும்புகளை பறிமுதல் செய்ததோடு இருவரையும் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 29 உடும்புகள் மற்றும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஒப்படைக்கப்பட்ட உடும்புகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் காடுகளில் பத்ரிரமாக விடப்படவுள்ளது.

    அழிந்துவரும் இனமான உடும்புகளை பிடித்து சாக்குப்பையில் திருச்சிக்கு கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது பாக்கியராஜ், சின்னதுரை (52) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    அரியலூர் ;

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 34), சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (52) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலம் அருகே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து ராசிபுரத்திற்கு நேற்று அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை ராசிபுரம் அருகே உள்ள பழந்தின்னிபட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக செந்தில்குமார் இருந்தார்.

    நேற்று இந்த பஸ் கண்டர்குல மாணிக்கம் அருகில் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசினர். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து 3 பேரும் தப்பியோடி விட்டனர். இது குறித்து ரமேஷ் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை நடத்தினர்.

    அப்போது பஸ் மீது கல்வீசியது ஆட்டையாம்பட்டி அருகே உள்ள அரியம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (38), கண்டர் குலமாணிக்கம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (25), சண்முகம் (36) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மூர்த்தி மற்றும் சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததற்காக பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறினர். 2 பேரையும் சிறையில் அடைத்த போலீசார் தலைமறைவான கந்தசாமியை தேடி வருகிறார்கள்.

    டெல்லி அருகே இறைச்சி கடைகளை மூடும்படி மிரட்டிய இந்துசேனா அமைப்பினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குர்கான்:

    டெல்லியின் புறநகரான குர்கானில் நேற்று நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி இந்துசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் பாலம் விகார், பாத்ஷாபூர் மற்றும் ஓம்விகார் ஆகிய பகுதிகளில் திடீர் பேரணி நடத்தினர். கைகளில் தடி, ஹாக்கி மட்டைகள், கத்திகள் மற்றும் இரும்பு கம்பிகளை வைத்திருந்தனர்.

    பேரணி செல்லும் வழியில் 250-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் திறந்திருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நவராத்திரி விழா அன்று இறைச்சி கடைகளை திறக்க கூடாது அவற்றை மூட வேண்டும் என மிரட்டல் விடுத்தனர்.

    பல இறைச்சி கடைகளின் ‘‌ஷட்டர்’ கதவுகளை இழுத்து மூடினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. வீதிகளில் இருந்து மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அமைதி ஏற்படுத்தினர். கண்காணிப்பு கேமரா வீடியோ மூலம் இந்துசேனா அமைப்பை சேர்ந்த ராஜேஷ், பிரமோத்சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் 40 பேர் மீது மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    திருச்சி அருகே மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை கொலை செய்த தாய்மாமன் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே பஞ்சப்பூர் பூங்கா எதிரே உள்ள முட்புதரில் கடந்த திங்கட்கிழமை வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    துணை போலீஸ் கமி‌ஷனர் நிஷா, உதவி போலீஸ் கமி‌ஷனர் சிகாமணி, இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தகரம் புதுகிராமத்தைச் சேர்ந்த இருதயராஜ் மகன் சூரிய பிரகாஷ் (வயது 21) எனத் தெரியவந்தது. கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சூரியபிரகாசை அவரது தாய்மாமன் கோவில்பட்டி குளத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரியவந்தது.

    ஆறுமுகத்தின் தங்கை துர்க்கையம்மாள் மகனான சூரியபிரகாஷ் அடிதடி, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார். தன்னை ரவுடி போல காட்டிக் கொண்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் ஆறுமுகத்தின் மகன் ஆனந்தின் மனைவிக்கு சூரியபிரகாஷ் செல்போனில் ஆபாச படங்கள் அனுப்புவது, ஆபாசமாக பேசுவது என செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சூரியபிரகாசை உறவினர்கள் தட்டிக்கேட்ட போது தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஞயிற்றுக்கிழமை தாய்மாமன் ஆறுமுகத்தை சூரிய பிரகாஷ் அடித்துள்ளார். இதை தட்டிக் கேட்ட அவரது மகன்கள் ஆனந்த், மணிகண்டன் ஆகியோரையும் தாக்கியுள்ளார்.

    இதனால் ஆறுமுகம் அவமானம் அடைந்தார். அவரது மகன்களும் சூர்யபிரகாஷ் மீது கோபம் அடைந்தனர். தொடர்ந்து தொல்லை கொடுப்பதால் அவரை தீர்த்துக்கட்டுவது என முடிவு செய்துள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை சூர்யபிரகாசிடம் பெரம்பலூருக்கு செல்லலாம் என காரில் அழைத்து வந்தனர். வழியில் சூர்யபிரகாசிற்கு அதிக அளவு மது வாங்கி கொடுத்தனர்.

    அவர் போதையில் இருந்த போது காருக்குள்ளேயே அவரது கழுத்தை நெரித்தனர். இதில் அவர் மயங்கினார். அதன் பிறகு அவரது உடலில் அரிவாளால் வயிறு, மார்பு உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக வெட்டினர். ஆத்திரம் தீர வெட்டி முடித்ததும் சூர்ய பிரகாஷ் இறந்ததை உறுதி செய்தனர்.

    அதன் பிறகு காரில் திருச்சியை நோக்கி வந்தனர். பஞ்சப்பூர் அருகே வந்தபோது திருச்சி மாநகருக்குள் நுழைந்தால் சோதனை சாவடியில் போலீசார் பிணத்தை பார்த்து விடுவார்கள் என்பதால் பஞ்சப்பூர் முட்புதருக்குள் உடலை வீசி விட்டு தப்பியுள்ளனர்.

    இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து தாய் மாமன் ஆறுமுகம், மற்றும் கார் டிரைவர் பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆறுமுகத்தின் மகன்கள் ஆனந்த், மணிகண்டன் மற்றும் ரவிக்குமார், செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் நேற்று கடலூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    ஆறுமுகத்தையும் டிரைவர் பிரகாசையும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கடலூர் கோர்ட்டில் சரணடைந்த 4 பேரும் கடலூர் கோர்ட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக திங்கட்கிழமை கோர்ட்டில் மனு செய்யவுள்ளனர். #tamilnews
    வில்லியனூர் அருகே குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு மங்கலம்- உருவையாறு ரோட்டில் ரோந்து பணி சென்றனர். அப்போது 2 பேர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டனர்.

    அவர்களை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்களில் ஒருவர் விழுப்புரம் அருகே அய்யூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகப்பன் (வயது 48) என்பதும், மற்றொருவர் திருபுவனை பெரிய காலனியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி அம்பேத்கார் (41) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×