என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 people were arrested"
- அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்
- 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பவானிசாகர், அம்மாபேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குறிச்சி டாஸ்மாக் கடை, பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பவானி கேசரிமங்கலம் ஆண்டிகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் மகன் கிட்டுசாமி (வயது 55),
சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலபார் பீடி கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.
- ஒரு சாக்கு மூட்டையில் அசல் மலபார் பீடியை போன்று போலியான மலபார் பீடி 20 பண்டல்கள் வைத்திருந்தனர்.
நிலக்கோட்டை:
மதுரை மாவட்டம் கோசி கடை பகுதியை சேர்ந்த வர் தங்கராசு (வயது 51). இவர் மலபார் பீடி கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டி சவுடம்மன்கோவில் பகுதியில் போலி மலபார் பீடி விற்கப்படுவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது அங்கு திண்டுக்கல், பேகம்பூரைச் சேர்ந்த காஜா முகைதீன் (வயது 54) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த காளிமுத்து (வயது 52) ஆகிய 2 பேரும் ஒரு சாக்கு மூட்டையில் அசல் மலபார் பீடியை போன்று போலியான மலபார் பீடி 20 பண்டல்கள் வைத்திருந்தனர்.
உடனே கையும் களவுமாக பிடித்து விளாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரனிடம் ஒப்படைத்து கொடுத்த புகாரின் படி 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2 பேரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்தது தெரிய வந்தது.
- 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த போதை காளான் கைப்பற்றப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜாராமன் மகன் நிஷாந்த் (வயது 22), கொடைக்கானல் மேல் மலை பூண்டி பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (30) என்பதும் 2 பேரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்தது தெரிய வந்தது.
இது பற்றி கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்த், தமிழ் செல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த போதை காளான் கைப்பற்றப்பட்டது.
- அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.
- மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த நபர் அதேபகுதியை சேர்ந்த அய்யாசாமி (40) என்பதும், அவரது மொபட்டை சோதனை செய்தபோது மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் அதிக லாபத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அய்யாசாமியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பெரியசெம்மாண்டாம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த சாமியப்பன் (80) என்பவரை மலையம்பாளையம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இளம்பெண் கையில் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.
- அவர்களை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சர்மிளா (வயது 28). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை அருகேயுள்ள இரு சக்கர மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை பணியை முடித்துவிட்டு உத்தமபாளையம் செல்வதற்காக அரசு போக்குவரத்து பணி மனை பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சர்மிளா கையில் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.
இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன் ேபரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் கம்பம் அருகே உள்ள காமயவுண்டன்பட்டியைச் சேர்ந்த குப்பு சின்னு (வயது 22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து செல்போனை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
- அறையில் பீரோவில் இருந்த 1¾ சவரன் நெக்லஸ், ½ சவரன் தோடு உள்ளிட்டவை காணமாமல் போய் இருந்தது.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
சரவணம்பட்டி,
கோவை கீரணத்தம் சைபர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவ சகாயம்(65). நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள சர்ச்சுக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு வந்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் பீரோவில் இருந்த 1¾ சவரன் நெக்லஸ், ½ சவரன் தோடு உள்ளிட்டவை காணமாமல் போய் இருந்தது.இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்களை நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தேவசகாயம் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வந்தனர். கோவில்பாளையம் போலீசார் சரவணம்பட்டி- கீரணத்தம் சாலையில் கல்லுகுழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தென்காசி மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்த சுபாஷ்(25), உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த ஜெகன்(34) என்பதும், நகையை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகைகளையும் மீட்டனர்.
- அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மொடக் குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா, அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி னர். அப்போது ராசாம் பாளையம் பகுதியில் 2 பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் போலீசை கண்ட தும் தப்பி ஓடினர்.
தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரி த்தனர். இதில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த அஜீத் (22), ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலா (29) என்பதும் அவர்கள் வீட்டில் கஞ்சா வை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதனையடுத்து ராசாம்பாளையத்தில் உள்ள பாலாவின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ேமலும் பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம்கோயல் நேரில் சென்று விசாரனை நடத்தி னார்.
இதில் லாரி டிரைவரான பாலா முகாசி அனுமன் பள்ளியை சேர்ந்த கணேசன் என்பவர் மூலம் கஞ்சா வாங்கி ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, லக்காபுரம், 4 6புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அஜீத், பாலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கணேசன் என்ப வரை போலீசார் தேடி வரு கின்றனர்.
- பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர்.
- விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி சோதனை சாவடி வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு சரக்கு வாகனத்தில் பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்படுவதாக பர்கூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மைசூர் தோஸ்த்து வாகத்தில் இருந்து சோளம்லோடு ஏற்றி கொண்டு ஒரு சரக்கு வாகனம் வந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனத்தில் தடை செய்ய ப்பட்ட பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ஆன்ஸ் 35 மூட்டை, விமல் பாக்கு 15 மூட்டை, வி.ஐ. டோபோகோ 3 மூட்டை, ஆர்.எம்.டி. 2 பாக்ஸ் உள்பட போதை பொருட்கள், சரக்கு வாகனம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் பவானி அந்தியூர் பிரிவு பகுதி சேர்ந்த அருண் (36), மற்றும் கொள்ளேகால் மாவட்டம் சாம்ராஜ்நகர் ராமாபுரம் கோபிசெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (60) ஆகிய பேரையும் போலீசார் கைது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபரை மிரட்டி செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் செக்கடி தெருவை சேர்ந்தவர் முகமதுராஜித்(23). இவர் புதுபஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெட்ரோல் காலியாகிவிட்டது. அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் முகமதுராஜித்தை மிரட்டி அவரை தாக்கி விலைஉயர்ந்த செல்போன், வெள்ளி மோதிரம், செயினை பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளையும், செல்போன் சிக்னலையும் வைத்து விசாரணை நடத்தினர்.
இன்று காலை புதிய பஸ்நிலைய பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் முகமதுராஜித்திடம் செல்போன் பறித்து சென்ற குரங்குமாயன் தெருவை சேர்ந்த சிவனேசன்(21), செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரிஷி(25) என தெரியவந்தது.
போலீசார் 2 பேரையும் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- கம்பம் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கடைக்கு சென்று சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
கம்பம்:
கம்பம் மணிநகரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று கிராம சாவடி தெருவில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை வாங்கி பயன்படுத்தி உள்ளார்.
அப்போது போதை தலைக்கேறி மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடைக்கு சென்று சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ரூ.10,752 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து செல்வம் என்பவரை கைது செய்தனர்.
ராயப்பன்பட்டி போலீசார் ஆனைமலையான் பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புகையிலை விற்ற அழகர்சாமி (42). என்பவரை கைது செய்து 23 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- மேலும், அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், மது விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.1,900 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
கருங்கல்பாளையம் போலீசார் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் கருங்கல்பாளையம் கமலாநகரை சேர்ந்த சக்திவேல் (36) என்பதும், அவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு பவானிரோட்டில் மது விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் புதுவயல் பகுதியை சேர்ந்த சாமிதுரையின் மகன் அரவிந்த் (23) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், மது விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.1,900 பறிமுதல் செய்யப்பட்டது.
- மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடுகளை திருடி சென்று கொண்டிருப்பதை கண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
- இதில் அவர்கள் திருடிய ஆட்டை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கறிக்கடையில் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி சாவடி ப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (44). இவர் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறார்.
இவர் வீட்டில் ஏராள மான ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். ஆடு, மாடுகளை அதே பகுதியில் தனக்கு சொந்தமான தோட்ட த்திற்கு சென்று தினமும் காலை மேய்க்க விட்டு மாலை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம்.
இதேபோல் நேற்றும் நந்தகுமார் ஆடு, மாடுகளை தோட்டத்தில் மேய்க்க விட்டிருந்தார். பின்னர் மதியம் நந்தகுமார் தோட்டத்திற்கு வந்து பார்த்த போது மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடுகளை திருடி சென்று கொண்டிருப்பதை கண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த 2 பேரையும் நந்தகுமார் மடக்கி பிடித்தார். இது குறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (44), மற்றொருவர் ஊத்துக்குளி காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்த பூபதி (37) என்பதும் அவர்கள் ஆட்டை திருடி சென்றதும் ஒப்புக்கொண்டனர்.
இதில் அவர்கள் திருடிய ஆட்டை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கறிக்கடையில் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்