என் மலர்
நீங்கள் தேடியது "2 Point O"
சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை என்று ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Rajini #2Point0
ரஜினி நடித்து சங்கர் இயக்கி உள்ள 2.0 படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘ரஜினி நடித்து வெளிவரவுள்ள 2.0 திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்க்கானும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப் படவேண்டும்.
திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்யக்கூடாது. ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது.
இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அதில் கூறியுள்ளார்.

ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் சில நிர்வாகிகள் 200 ரூபாய் டிக்கெட்டை, 2000, 3000 என்று விற்று வந்தனர். இதற்கு முடிவுகட்டும் வகையில் ரஜினி மன்றத் தலைமையின் அறிவிப்பு வந்துள்ளது.
விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்திருக்கும் ரஜினி, தன் மீதோ தன் மன்ற நிர்வாகிகள் மீதோ எந்த புகாரும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
நேர்மையானவர்கள் மட்டுமே தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். மற்ற அரசியல் வாதிகள் தன் மீது குற்றம் சாட்டிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் வில்லன் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. #2PointO
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது.
My look in #2Point0 is nothing short of a technological wonder! Watch to know how it was brought to life.@2Point0Movie@shankarshanmugh@DharmaMovies@LycaProductions#2Point0FromNov29pic.twitter.com/NfUfUPb2L1
— Akshay Kumar (@akshaykumar) November 16, 2018
தற்போது வில்லன் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. #2Point0 #AkshayKumar
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது.

தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர். #2Point0 #Rajinikanth
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilRockers
தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படும் ஒரு இணையதளம், தமிழ் ராக்கர்ஸ். புதிய தமிழ் படங்கள் திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. பல வருடங்களாக முயற்சித்தும் இந்த தளத்துக்கு பின்னால் செயல்படுபவர்களை பிடிக்கவோ, தளத்தை முடக்கவோ முடியவில்லை.
சமீபத்தில், விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தை ‘ரிலீஸ்’ அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில், ஒரு சவால் விடப்பட்டது. சொன்ன மாதிரியே ‘சர்கார்’ படம் ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது, தமிழ் பட உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் ‘2.0’ படத்தையும் ரிலீஸ் அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் சவால் விடப்பட்டு இருக்கிறது. இது, தமிழ் பட உலகில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், தங்கள் பெயரை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது. தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
‘‘டுவிட்டரிலோ மற்ற சமூக வலைதளங்களிலோ நாங்கள் இல்லை. சமூக வலைதளங்களில் எங்களின் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அது போலியே. அதுபோன்ற ஐ.டி.க்களையும், அவர்கள் பரப்பும் வதந்திகளையும் நம்பாதீர்கள்’’ என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் சங்கர் அறிவித்திருக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #2Point0 #Rajinikanth
The FIFTH FORCE is coming! #2point0Trailer#2point0TrailerOnNov3pic.twitter.com/f4dBcA9fms
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 28, 2018
சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. #2PointO
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை நவம்பர் மாதம் 29-ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார். மேலும் இப்படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியானது. இது ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது.

தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. 4வது மேக்கிங் வீடியோவான இதுவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. #Rajinikanth #2PointO
ரஜினியின் எந்திரன் படத்தை தொடந்து மீண்டும் அவருடன் ஐஸ்வர்யா ராய் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #2PointO #Rajini
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
இந்த படம் நவம்பர் 29 ந்தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படம் இது. சுமார் ரூ.543 கோடி செலவில் 2.0 படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது தமிழ் திரைப்பட அறிமுகத்தை மெகா பட்ஜெட்டில் தொடங்கி உள்ளார். இதில், அவர் வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படம் வெளியாக 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளிவந்து உள்ளது.

பாலிவுட் லைப் இணைய தளம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யாராய் 2010 சூப்பர் ஹிட் படமான 'எந்திரன்' படத்தில் நடித்துள்ளார், இது 2.0 இன் முன் படமாகும். ஐஸ்வர்யா ராய் உண்மையில் படத்தில் ஒரு கவுரவ தோற்றம் கொண்டால் நாம் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை.
தகவலில் ஐஸ்வர்யாராய் விஞ்ஞானியாக நடித்த ரஜினிகாந்தின் வசீகரன் பாத்திரத்துடன் உணர்ச்சித் தோற்றத்தைக் கொண்டிருப்பார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை அன்று சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் டீசர் வெளியிடப் படம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0Teaser
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார். மேலும் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். தற்போது இதன் டீசரை (செப்டம்பர் 13) நாளை காலை 9 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
#2point0 teaser pic.twitter.com/Wq3m6dKJir
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 12, 2018
இதுதவிர இந்த டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க ரசிகர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. #Rajinikanth #2PointO #2PointOTeaser
விநாயகர் சதுர்த்தியை அன்று சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் டீசரை தியேட்டரில் பார்க்க புதிய முயற்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. #2Point0Teaser
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.
கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார்.
2.0 marks the first ever 3D Teaser and you can watch the premiere in a PVR & Sathyam theatre near you. Give a missed call on +91 9099949466 to book your free ticket. #2Point0Teaser in 2 days 👓 pic.twitter.com/g7vt6P5V59
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 11, 2018
மேலும் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது இந்த டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதாவது +91 9099949466 இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் 2.O டீசரை தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம் என்று சங்கர் கூறியிருக்கிறார். #Rajinikanth #2PointO
உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவருமே ஹீரோவாகவே நடிச்சிட்டுப் போகட்டும் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார். #Rajini #Kamal
சுகாசினி தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடிக்கிறார். மற்றபடி கணவர் மணிரத்னத்துக்கு பக்கபலமாக இருக்கிறார். ஒரு பேட்டியில் அவரிடம் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள் இன்னும் ஹீரோக்களாகவே நடிக்கிறார்களே என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்திருக்கும் அவர் `16 வயதினிலே' படத்துல கமலோ, ரஜினியோ ஹீரோவா இருந்தாங்களா? ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல ரஜினி ஹீரோவா இருந்தாரா? இல்லையே... நாகேஷ் நடிச்ச எல்லா படங்களிலும் ஹீரோவா இருந்தாரா? ஹீரோயின் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னும் சொல்லப்போனா, இப்ப ஹீரோயினா இல்லாததால ரொம்ப சந்தோஷமா இருக்கு.
கலர் கலரா டிரஸ் போட்டுட்டு, நிறைய மேக்கப் போட்டுட்டு டான்ஸ் ஆடுற வேலையெல்லாம் இல்லாம, நடிக்கிற கேரக்டர் கொடுக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு. கமல்கூட நான் ஜோடியா நடிச்சதில்லை. ரஜினியோடு நடிச்சிருக்கேன்.

மற்றபடி என்னோடு ஹீரோவா நடிச்சு இப்பவும் ஹீரோவா நடிக்கிறவங்களை பார்த்து சந்தோஷமா இருக்கு.
அவங்க ஹீரோவா நடிச்சிட்டுப்போகட்டுமே... பரவாயில்லை. இது வாழ்க்கைதானே...’ என்று பதில் அளித்திருக்கிறார்.
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.O படத்தின் டீசர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Rajinikanth #2PointO #2PointOTeaser
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.
கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார்.
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 7, 2018
இந்நிலையில், இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சங்கர் அறிவித்திருக்கிறார். #Rajinikanth #2PointO
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.O திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Rajinikanth #2PointO
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.
Hi everyone.. atlast the vfx companies promised the final delivery date of the vfx shots. The movie will release on nov 29th 2018.#2Point0pic.twitter.com/ArAuo5KxM7
— Shankar Shanmugham (@shankarshanmugh) July 10, 2018
கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. தற்போது படத்தின் இயக்குனர் சங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய இருப்பதாகவும், அதனால் படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். #Rajinikanth #2PointO