search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 World Cup"

    • கடந்த 10 ஆண்டுகளில் நிறைய இலக்குகளை எட்டி உள்ளோம்.
    • வெற்றியை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றுவோம்.

    கிங்ஸ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி கொடுத்தது. அந்த அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது.

    149 ரன் இலக்கை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா 127 ரன்னில் சுருண்டது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் குல்பதின் நைப் 20 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர் கூறியதாவது:-

    இந்த வெற்றிக்காகவே நீண்ட காலம் காத்திருந்தோம். இது எனக்கு மட்டும் சிறந்த தருணம் அல்ல, என் நாட்டுக்கும் சிறந்த தருணமாகும். எங்கள் கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெரிய சாதனை. சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்களை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு நன்றி.

    கடந்த 2 மாதங்களாக கடுமையாக உழைத்தோம். ஒருவழியாக, கடைசியில் ஆஸ்திரேலியாவையும் ஜெயித்து விட்டோம். இறைவனுக்கு நன்றி. எங்கள் கிரிக்கெட் அணி பெரிய சாதனைகளை நிகழ்த்தியது கிடையாது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிறைய இலக்குகளை எட்டி உள்ளோம்.

    நாங்கள் முதல் சுற்றில் நியூசிலாந்தை தோற்கடித்தோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதல்ல. அவர்கள் உலக சாம்பியன் அணி. எங்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வெற்றி பெரிய சாதனை. இந்த வெற்றியை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×