என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024"

    • தற்போது ’கிரிஷ் லைவ் இன் துபாய்’ என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.
    • நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

    பின்னணி பாடகரான கிரிஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர். நடிகை சங்கீதாவின் கணவன் ஆவார்.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான படங்களான வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, வேட்டைகாரன், வாரணம் ஆயிரம், என்றென்றும் புன்னகை, அயன் போன்ற படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடியுள்ளார்.

    தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.இந்நிலையில் அவரது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் 'லவ் யூ அண்ணா' #GOAT என பதிவிட்டுள்ளார்.

    • மார்ச் 1 ஆம் தேதி டியூன் பாகம் 2 வெளியானது
    • 94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் 6 விருதுகளை டியூன் பாகம் 1 வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    டியூன் பாகம் 1 2021 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை டெனிஸ் இயக்கினார்.இப்படம் 1965 வெளிவந்த நாவலின் அடிப்படையில் எடுக்கபட்டது. ஜான் மற்றும் எரிக் ரோத் திரைக்கதை எழுதியுள்ளனர். சை ஃபை கதைகளமாக இந்த படம் வடிவமைக்கப்பட்டது.

    165 மில்லியன் டாலர் பொருட் செலவில் எடுக்கபட்ட இந்த படம் 435 மில்லியன் டாலர் உலகளவு வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. ட்யூன் பாகம் ஒன்றின் வெற்றியைத் தொடர்ந்து பாகம் 2 எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

    அதன்படி படப்பிடிப்பு முடிந்துமார்ச் 1 ஆம் தேதி டியூன் பாகம் 2 வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது. சென்னையுள்ள பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிகொண்டு இருக்கிறது டியூன்.94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் 6 விருதுகளை டியூன் பாகம் 1 வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஷாலின் அடுத்த படமான "ரத்னம்" படத்தின் முதல் பாடல் அங்கு வெளியிடப்பட்டது.
    • நான் இதனை கடந்த 10 வருடங்களாக பின்பற்றி வருகிறேன். இதில் எனக்கு எதுவும் தப்பாக தெரியவில்லை.

    நடிகர் விஷால் நேற்று நடைபெற்ற வி.ஐ.டி வைப்ரன்ஸ் ஃபெஸ்ட் 2024 என்கிற கல்லூரி விழாவில் பங்கேற்றார்.

    விஷாலின் அடுத்த படமான "ரத்னம்" படத்தின் முதல் பாடல் அங்கு வெளியிடப்பட்டது.

    ரத்னம் படக்குழுவினர் இயக்குனர் ஹரி, சமூத்திரகனி, தேவி ஸ்ரீ ப்ரசாத் என அனைவரும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அப்போது அக்கல்லூரி மாணவர் ஒருவர் விஷாலிடம் கேள்வி கேட்டார்.

    சமீபமாக, விஷால் சாப்பிடுவதற்கு முன்பு அவர் உணவிற்கு நன்றி கூறும் முறையை நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.

    அதைப்பார்த்து பலர் அவரைப் போலவே நடித்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை பதிவிட்டிருந்தனர். அந்த வணங்கும் முறைக்கு பின் ஏதேனும் காரணம் இருக்கிறதா ? என்று கேட்டான்.

    அதற்கு பதிலளித்த விஷால், "நான் இதனை கடந்த 10 வருடங்களாக பின்பற்றி வருகிறேன். இதில் எனக்கு எதுவும் தப்பாக தெரியவில்லை. அனைத்து கடவுளும் எனக்கு ஒன்று தான். எனக்கு முதல் கடவுள் கேமராதான். அது தான் எனக்கு சாப்பாடு அளிக்கிறது. நான் இதை பப்லிசிட்டிகாகலாம் எதுவும் செய்யவில்லை" என்று கூறினார்.

    • "நமக்கு டஃப் காம்படிஷன் குடுப்பாங்க போலயே அமுதன் சார்" என்று இயக்குநர் அமுதனை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • காத்து கருப்பு கலை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்

    இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்ற காத்து கருப்பு கலை. அவர் பதிவிடும் ரீல்ஸ்கள் பல லட்சகணக்கான வியூஸ்களை அள்ளும். இவர் சமீபத்தில் வெளியிட்ட சாமியாரை கலாய்க்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பிரபலமானது.

    இந்நிலையில் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவர் நடிக்கும் படத்திற்கு "ரத்த பூமி" என தலைப்பு வைத்து இருக்கின்றனர். இப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா நேற்று நடைப்பெற்றது. படத்தின் இயக்குநர் பேசும் போது, காத்து கருப்பு கலை தான் அடுத்த தளபதி என்றும், ஆக்ஷன் ஹீராவாக வரும் அனைத்து தகுதிகளும் இவருக்கு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து பேசிய காத்து கருப்பு கலை "நான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகிட்டதுக்கு ஒரே ஒரு சீன் தான் காரணம். நான் என் கையால ஓடிகிட்டு இருக்குற ரயில நிறுத்துறன்' என்று மிக சீரியசாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு "நமக்கு டஃப் காம்படிஷன் குடுப்பாங்க போலயே அமுதன் சார்" என்று இயக்குநர் அமுதனை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதற்கு பதிலளித்த இயக்குனர் அமுதன் "நாம் ஒருபோதும் நமது இடத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உழைச்சிகிட்டே இருந்தா தான் இவங்களோட களத்துல இருக்க முடியும்…" என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

    • கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையா
    • அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார்.

    கிராமத்து பின்னணியுடைய படங்கள் மிகவும் அரிதாகி விட்டன. இதை எடுக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே எனலாம். கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையா. இவர் எடுத்த கொம்பன்,குட்டி புலி,விருமன், போன்ற படங்களே இதற்கு சாட்சி.

    கார்த்தி நடிப்பில் வெளிவந்த கொம்பனும்,விருமனும் மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்யா நடித்து வெளியான 'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்தார்.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நடிகர் பரத் வில்லனாக நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்கள் நடித்தும் பரத்திற்கு எந்த நல்ல படமும் அமையவில்லை. முத்தையா படத்தில் வரும் வில்லனுக்கு எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.

    அதனால் நல்ல கிராமத்து பின்னணியில் அமையவுள்ள இப்படத்தில் பரத்திற்கு நல்ல கம் பேக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    • இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தனது அடுத்த படைப்பை துவங்கியுள்ளார்.
    • இந்த படத்திற்கு ’ஹாட் ஸ்பாட்’ என பெயர் வைத்துள்ளனர்.

    நடிகர் ஜி.வி பிரகாஷ், கவுரி கிஷன், வெங்கட் பிரபு மற்றும் பலர் நடித்து 2023 ஆண்டில் வெளியான படம் "அடியே". விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கினார். அடியே படம் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற "வா செந்தாழினி" பாடல் மிகவும் ஹிட்டானது.

    இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தனது அடுத்த படைப்பை துவங்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம், ஜனனி ஐயர், சோபியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு 'ஹாட் ஸ்பாட்' என பெயர் வைத்துள்ளனர். இப்படம் ஒரு ஹைப்பர் லின்க் படமாக இருக்கும் எனவும், நான்கு தனிபட்ட கதைகள் இதில் அமைந்துள்ளது எனவும், ஒவ்வொரு கதையும் அதற்கென தனிபட்ட தன்மையை கொண்டு இருக்கும் என இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    கோகுல் பினாய் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சதிஷ் ரகுநாதன் மற்றும் வான் படத்திற்கு இசையமைத்து இருக்கின்றனர். கே.ஜே.பி. மற்றும் 7 வாரியர் ஃபில்ம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். மார்ச் 29 ஆம் தேதி ஹாட் ஸ்பாட் படம் வெளியாக உள்ளது.

    • தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார்.
    • மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான “ரெபெல்” வெளியாக உள்ளது.

    ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்து இருந்தார். கேப்டன் மில்லர் படத்திற்கு கூடுதல் போனசாக இருந்தது ஜி. வி. ப்ரகாஷின் இசை. மக்கள் அனைவராலும் பாராட்டு பெற்றது.

    இவர் இசையமைத்த வா வாத்தி, கருப்பு நெரத்தழகி, மார்க் ஆண்டனி மற்றும் அடியே படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்கள் மனதில் எப்போழுதும் கேட்டுக் கொண்டே இருக்கும். சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர்கான தேசிய விருதை பெற்றார்.

    இசையில் மட்டுமல்ல நடிப்பிலும் இவர் அசுரனாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான பேச்சுலர் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான "ரெபெல்" வெளியாக உள்ளது.அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.

    கேரளாவில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மமிதா பைஜூ இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மார்ச் 22-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.




     


    நாகர்கோயிலிலுள்ள சிறு ஊரில் நடக்கும் புறா பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பைரி. அப்பாவை இழந்த தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என தாய் ஆசைப்படுகிறாள். ஆனால் தாயின் பேச்சை கேட்காமல் புறா பந்தயத்தில் ஈடுப்படுகிறான் நாயகன்.

    புறா பந்தயத்தில் இருக்கும் பிரச்சனைகளும் அதில் இருக்கும் விரோதம், துரோகத்தை பற்றி பேசுகிறது இந்த படம். ஜான் கிளாடி இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரமேஷ் ஆறுமுகம், மேகனா எலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    சிவகார்த்திகேயன் நல்ல படங்களை பார்த்தால் அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டும் பழக்கமுடையவர். பிப்ரவரி மாதம் ரியோ ராஜ் நடித்து வெளியான் "ஜோ" திரைபடக்குழுவினரை அழைத்து பாராட்டினார்.

    இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பைரி படக்குழுவினரை அழைத்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் படக்குழுவினரிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     

     

    • அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது
    • "எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க" என கூறினார்

    வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் சிவக்கார்த்திகேயன் முக்கிய பங்கு வகுக்கிறார். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவரின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷ்ன்ஸ் இருக்கிறது.

    சமீபத்தில் வெளியான அயலான் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.குழந்தை ரசிர்கர்கள் சிவகார்த்திகேயனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அயலான் படத்தை தொடர்ந்து அவரின் 21-வது படமான அமரனை கமலஹாசன் தயாரிக்கிறார்.

    சாய் பல்லவி,புவன் அரோரா,ராஹுல் போஸ் போன்ற பல நட்சத்திரங்கள் இதில் நடித்துருக்கின்றனர். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்த்ற்கு இசையமைத்துள்ளார்.

    அமரன் படத்தில் சிவகார்த்திக்கேயன் ராணுவ கமாண்டோவாக நடித்து இருக்கிறார்.

    இதற்காக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றி கம்மோண்டோவின் தோற்றத்தில் கச்சிதமாக இருக்கிறார்.

    அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படத்திற்க்கு நெட்ஃப்லிக்ஸ் கொடுத்த அதிகபட்ச தொகை இது. முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் ரைட்சை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

    அதனால் இப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று அவரது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் " எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க. என் சினிமா வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணதுல இருந்து இப்போ வரைக்கும் நிறைய பிரச்சனை, வலி இருந்திருக்கு சிலது உங்களுக்கு தெரியும் சிலது தெரியாது. பிராப்ளம் ஷேர் பண்ண அப்பா இல்ல சப்போர்ட் பண்ண அண்ணனும் இல்ல. ஆனா இப்போ என் ஃபேன்சான ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் நீங்க இருந்தீங்க இருப்பீங்க" என மன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    பின் சந்திப்பை முடித்து அங்கு இருந்து கிளம்பும் போது ரசிகர்களைப் பார்த்து சாப்ட்டீங்களா என்று கேடு விட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பிப்ரவரி மாதம் வைபவ் நடித்து வெளியான படம் ரணம்.
    • வைபவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் பிரபு.

    பிப்ரவரி மாதம் வைபவ் நடித்து வெளியான படம் ரணம். நடிகர் வைபவிற்கு 25 -வது படமாக இப்படம் அமைந்தது. ரணம் படத்தை ஷெரிஃப் இயக்கினார். வைபவுடன் நந்தித்தா ஸ்வேதா, தான்யா ஹோப் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரணம் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்தை பாராட்டி பதிவை வெளியிட்டார். வைபவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு அவரின் சரோஜா படத்தில் வைபவை அறிமுகம் செய்தார். இந்நிலையில் படத்தின் வெற்றியை அப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

     

     

    • கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர்
    • Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்

    கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர். இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். இத்தளத்திற்கு Cspace என்று பெயரிட்டுள்ளனர். மலையாள சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த முயற்சியை துவங்குகிறோம் என்று அப்போது பினராயி கூறினார். இது கலை மற்றும் கலாச்சார மதிப்புள்ள திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரு பாதையாக அமையும் என்றும், பிற ஓடிடி தளம் அனைத்தும் வியாபார நோக்கத்துடன பெரிய கமர்ஷியல் படங்களை மட்டும் வாங்குகின்றன., CSpace தரமான திரைப்படங்களை வீட்டிற்கு கொண்டு வரும் ஒரு ஊடகமாக முத்திரை பதிக்க உள்ளது என்றும் கூறினார்.

    Cspace ஓடிடி தளத்தில் ஏற்கனவே தியேட்டரில் வெளியான படங்களை மட்டும்தான் இடம்பெறும். அதனால் தியேட்டருக்கு சென்று பார்க்கும் பார்வையாளர்களை அது பாதிக்காத வண்ணம் இது செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற படமும் இதில் இடம்பெரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 42 படங்கள் Cspace ஓடிடி தளத்தில் இடம்பெறவுள்ளது. அதில் 35 முழு நீள படங்களும், 6 ஆவணப் படங்களும்,1 குறும்படமும் இடம்பெறவுள்ளது.

    சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்களை இந்த ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    பே பெர் வியூ என்ற அடிப்படையில் இந்த ஓடிடி தளம் இயங்கவுள்ளது. ஃபீட்சர் (Feature)படங்களை பார்க்க ரூ.75, குறும்படங்களை பார்க்க குறைவான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தில் பாதி தொகை அந்த படத்தின் தயாரிப்பளருக்கு சென்றடையும் என்று குறிப்பிட்டுள்ளனர். Cspace-ன் app-ஐ கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இருந்து நாம் டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

    இந்த Cspace ஓடிடி தளம் வெளியானதால் சிறிய பட்ஜெட் படங்களுக்கும், வணிக சமரசமின்றி எடுக்கப்படும் யதார்த்தப் படைப்புகளுக்கும் பெரும் வரமாக இருக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.



     


    • உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது.
    • இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது

    மலையாள சினிமாவின் சிறந்த முன்னணி இயக்குனரில் ஒருவர்தான் பிளெஸ்சி ஐப் தாமஸ். இவரை அனைவரும் ப்ளெஸி என்று தான் திரைத்துறையில் அழைப்பர். இயக்குனர் பிளெஸ்சி இயக்கிய காழ்ச்சா திரைப்படம் 2004-ல் வெளியானது. இதுவே இவருக்கு முதல் படம். மம்முட்டி, பத்மப்ரியா நடித்த இந்த படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 3 ஃபில்ம் ஃபேர் சவுத் விருதுகளை வென்றது காழ்ச்சா படம். இயக்குனர் பிளெஸ்சிக்கு காழ்ச்சா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.

    அதற்கு பிறகு 2005-ல் அடுத்த படமான 'தன்மாத்ர' படத்தை இயக்கினார். இது பத்மராஜனின் "ஓர்மா" சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்சி எழுதி இயக்கி 150 நாட்கள் ஓடிய திரைப்படம். தன்மாத்ர சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என 5 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றது. 53-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது. 2011-ல் 'பிரணயம்'படத்தை பிளெஸ்சி இயக்கினார். இத்திரைப்படம் அந்த அளவுக்கு வணிக ரீதியாக பெருமளவு வசூலிக்கவில்லை.

    இவர் எடுத்த "100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம் "ஆணவப் படம் 2018 வெளியானது. உலகின் மிக நீளமான ஆவணப்படத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது. அந்த ஆவணப் படத்திற்கான நீளம் 48 மணி நேரம் 10 நிமிடங்கள். இந்நிலையில் இயக்குனர் பிளெஸ்சி தனது அடுத்த படமாக 'ஆடுஜீவிதம்'படத்தை இயக்கியுள்ளார். மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ப்ருத்விராஜ் மற்றும் அமலா பால் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இப்படம். பிளெஸ்சி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று கொச்சினில் நடைப்பெற்றது. ஏர் ரகுமான், மோகன்லால், ப்ரிதிவிராஜ், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

     

     

     

     

    ×