என் மலர்
நீங்கள் தேடியது "238 அரசுப் பள்ளிகள்"
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 238 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #Plus2Result #HSCResult #Plus2100%Pass
சென்னை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 9,07,620. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 8,60,434. மாணவியரின் எண்ணிக்கை 4,60,255. மாணவர்களின் எண்ணிக்கை 4,00,179.
பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7,98,613. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 61,821.

இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், கடந்த 4 ஆண்டுகளாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு விவரங்களை http://www.dge.tn.nic.in/hscresanalysis.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். #Plus2Result #HSCResult #Plus2100%Pass
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 9,07,620. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 8,60,434. மாணவியரின் எண்ணிக்கை 4,60,255. மாணவர்களின் எண்ணிக்கை 4,00,179.
பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7,98,613. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 61,821.
ஒட்டுமொத்தத்தில் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 94.1 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் மாணவர்களைவிட 6.4 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 6,754. இதில் 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.