search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "29 பேர் பலி"

    வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர்.
    கரகஸ்:

    வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
     
    இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர். கலவரத்தை தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர்.

    இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். கைதிகள் தாக்கியதில் 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, அசாமில் இன்று 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. #CitizenshipBill #AssamProtest #AASU
    கவுகாத்தி:

    மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 46 அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் 23-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.



    இந்நிலையில் அசாம் மாணவர் அமைப்பான ஏஏஎஸ்யு மற்றும் 28 அமைப்புகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. கவுகாத்தியின் கணேஷ்குரியில் இருந்து திஸ்பூர் வரை இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். #CitizenshipBill #AssamProtest #AASU
    பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுக்கு 17 பேர் பலியாகி உள்ளனர்.
    பாட்னா:

    பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் சப்ளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இடி மின்னல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் மட்டும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுக்கு 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல் ஜார்க்கண்டில் 12 பேர் உயிரிந்துள்ளனர். 28 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநிலத்தில் ஜூன் 12-ம்தேதி வரை பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 
    தமிழக சட்டசபை வரும் 29-ம் தேதி கூடுவதாகவும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNAssembly
    பெங்களூரு:

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்ததும், சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



    அதன்பின்னர் ஏப்ரல் 19-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பின்னர், 22ம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்து பேசினார். அத்துடன் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வரும் 29-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடுவதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார். அப்போது, துறை வாரியாக நிதி ஒதுக்குவதற்கு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். #TNAssembly

    ×